இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்:

இட்லி/தோசை மாவு – ஒரு கோப்பை (சற்றுப் புளித்திருந்தாலும் பரவாயில்லை),
கடலை மாவு – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய பெரிய (அ) சின்ன வெங்காயம் – தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – கொத்துமல்லி, – தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தேவையான அளவு,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி.

செய்முறை:

எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிச் சூடான எண்ணெயில் பொறித்தெடுத்தால், இன்ஸ்டன்ட்டாகப் போண்டா தயார்! சூடாக உண்ணச் சுவையாக இருக்கும். சுவைத்துப் பாருங்கள்!

உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author