இனிப்பு சமோசா (கர்ஜீகாய்)

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 500 கிராம்
நெய் – 100 கிராம்
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 250 கிராம்
கொப்பரைத் துருவல் – 100 கிராம்
வறுத்த கடலைப்பருப்பு – 150 கிராம்
ஏலக்காய் – 5
முந்திரி – 20 கிராம்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சலித்த மைதா மாவில் சிறிது உப்பும் நெய்யும் சேர்த்துக் கலந்து, சிறிது நீரூற்றிப் பூரி மாவைப் போல் பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, அதன் மேல் ஈரத்துணி போர்த்தி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அது ஊறுவதற்குள், வறுத்த கடலைப் பருப்பையும், ஏலக்காயையும் தனித்தனியாகப் பொடி செய்து கொண்டு, வாணலியில் சிறிது நெய் விட்டுச் சூடாக்கி அதில் இந்தப் பொடித்த கலவையைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுங்கள். பிறகு, அந்தப் பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சர்க்கரை, கொப்பரைத் துருவல், வறுத்த முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் பூரணம் தயார்.பின்னர், பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு சிறு உருண்டைகள் பிடித்து அவற்றின் நடுவே பூரணத்தை வைத்து மூடி, நுனியைச் சற்று ஈரமாக்கி மடித்து சமோசா கட்டரால் வெட்டுங்கள். பிறகு, இதைச் சூடான எண்ணெயில் பொறித்தெடுத்தால் கர்ஜீகாய் எனப்படும் இனிப்பு சமோசா சுவைக்கத் தயார்! 

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author