இயற்கை உலகம் ( 43)

சிங்கம் வனவிலங்குகளின் அரசனாக விளங்குதல்:

வரலாற்றின் தொடக்க காலம் முதற்கொண்டு சிங்கம் வலிமையின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. உலகில் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் கேடயங்கள், சின்னங்கள் மற்றும் பதாகைகள் ஆகியவற்றில் வலிமையின் சின்னமாகச் சிங்கத்தின் உருவமே பொறிக்கப்பட்டு வந்திருக்கிறது. சிங்கத்தின் குரல் கர்ஜனை அல்லது உறுமல் ஒலியாகும். பழங்கால எகிப்திலும் இந்தியாவிலும் சிங்கம் புனிதமான விலங்காகக் கருதப்பட்டது. கிறித்து பிறந்த போது சிங்கங்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்தன. ஆனால் தற்போது ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மட்டுமே சிங்கங்கள் வாழ்கின்றன.

சிங்கம், புலி ஆகிய இரண்டுமே காட்டு விலங்குகளில் பெரிதும் வலிமையானவையாகக் கருதப்படுபவை. வரிப் புலிகளும் சிங்கங்களும் ஒன்றையொன்று சந்திப்பதில்லை. சிங்கங்கள் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும் புலிகள் ஆசியாவில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.

புலிகள் தனிப்பட்ட வண்ணத்துடன் விளங்குவது :

புலியானது பூனைக் குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய விலங்கு என்பது வியப்பான செய்தியே. இதன் மேல் தோலின் நிறம், இளமஞ்சள் நிறத்திலிருந்து சிகப்பு வண்ணத்தில் அமைந்திருக்கும்; மேலும் சில நாடுகளில் இதன் நிறம் மேலும் மேலும் இருண்டு கருஞ்சிகப்பு நிறத்திலும் இருப்பதுண்டு. பாலி நாட்டுப் புலிகள் மிகவும் கருத்து இருக்கும். மேல் தோல் கருத்தும் உடலிலுள்ள வரிகள் பழுப்பு கலந்த கருமை நிறத்திலும் விளங்கும். இத்தகைய வண்ணக் கலவை புலிகளின் எதிரிகளை ஏமாற்றும் விதத்தில் அமைந்து புலிக்குப் பாதுகாப்பாகவும் அமைந்து விடுகிறது.

சிறுத்தைப் புலி அல்லது வேங்கை (leopard) என்பதும் பூனை இனத்தைச் சார்ந்த மற்றொரு வகைப் புலியாகும். இதன் உடல் முழுதும் புள்ளிகள் நிறைந்து இருக்கும். சிறுத்தையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான leopard என்பது இலத்தீன் மொழியின் leopardus என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது; இதன் பொருள் ‘புள்ளிகள் உள்ள சிங்கம் (spotted lion)’ என்பதாகும்.

About The Author