இராசிபலன்கள்(23-3-2015 முதல் 29-3-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல்வாதிகளிடமிருந்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். குழந்தைகளுக்குப் பரிசுகள், பாராட்டுகள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் பயிலும் வாய்ப்புக் கிடைக்கும். பூ, பழம், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், மந்திரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட தீராத வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தில் திருமண விஷயமாகக் காரணம் இல்லாத சிற்சில மனக் கசப்புகள் வந்து போகும். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தெய்வத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடும் மஞ்சள் ஆடை தானமும் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வேலை கிடைக்காத படித்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு வந்து சேரும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டும் சலுகைகளும் பெறுவார்கள். தொழிற்சாலை, இருப்பிடம் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! காதில் பிரச்சினை, முதுகு சம்பந்தமான வலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். மற்றவர்களுக்காகச் சொத்து, பணம் சம்பந்தமான விஷயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிருங்கள்! திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு, உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், பூஜைப்பொருள் வியாபாரிகள், தாய் – சேய் நல விடுதி சார்ந்தவர்கள் ஆகியோர்க்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பயணத்தில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாகச் சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனம் வாங்குவதற்கும், தொழிற்சாலைகளின் மேம்பாட்டுக்காகவும் நீண்ட காலமாக வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும். அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள் மிகவும் லாபம் அடைவர். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு மூலம் திடீர் தன வரவுகள் ஏற்படலாம். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவடைவீர்கள். ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும். மின்சாரம், அடுப்பு ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது! தொலை தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும்! வாய், வயிறு, முதுகு ஆகியவற்றில் சில உபாதைகள் வந்து போகலாம். பயணத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்! ஒரு சிலர் நண்பர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் அரசியல்வாதிகளால் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது!

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடும் கருப்பு ஆடை தானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணமோ, பொருளோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் அதைத் தவிருங்கள்! விவசாயம் செய்பவர்கள் சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவர். கலைத்துறை சார்ந்தவர்கள், படத் தயாரிப்பாளர்கள், திரை அரங்குகளை நடத்துபவர்கள், ஆபரண வியாபாரிகள், திருமணத் தகவல் மையம், திருமணக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பொதுத் தொண்டு நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்கள் அடைவீர்கள். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். இரும்பு, இயந்திரம், வேதியியல், பழைய பொருட்கள் ஆகியவை சார்ந்த வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தாய் வழிச் சொந்த பந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடுதல் நல்லது! பிள்ளைகளால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். விவசாயம் சுமாரான பலனையே தரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது! மற்றவர்களை நம்பிப் பணமோ பொருளோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடும் நீல ஆடை தானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். திரைப்படம், நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், பேப்பர் தொழிற்சாலை, அச்சகம் ஆகியவற்றை நடத்துபவர்கள், காய்கறி, இலை, கீரை, பருப்பு போன்ற உணவுப்பொருள் வியாபாரிகள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் புதிய கடன் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி வந்து சேரும். தந்தை – மகன் உறவில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றமும் ஏற்படக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் பச்சை ஆடை தானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டுமானப்பொருள் விற்பனை செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், திரைப்படம், நாடகம் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், நறுமணப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கார், லாரி, ஆடு, மாடு போன்ற வாகன வியாபாரம் செய்பவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் காரணமற்ற செலவுகள் வந்து சேரலாம். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வீடு, வாகனங்களைப் பழுது பார்க்கும் பொருட்டுச் செலவுகள் உண்டாகலாம். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். பயணத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! வேற்று மதத்தவர்கள் உதவக்கூடிய சூழல் இல்லை. திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் – பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், விவசாயம் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவர். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். தந்தை – மகன் உறவில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! நரம்பு, எலும்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாகப் பிரச்சினை உண்டாகிப் பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள், நணபர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வாயுத் தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகும். உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். இனிப்பு வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றை நடத்துபவர்கள், கணினி, நிலவளத்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்கள் அடைவர். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் கல்வி பயின்று வருதல் நல்லது! உற்றார் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகக்கூடிய காலமாகும். குலதெய்வ ஆலயத்தைத் திருத்திக் கட்டுவீர்கள். நெடு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் – குறிப்பாக, சகோதர சகோதரிகளின் திருமணம் – நடைபெறும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பயணத்தின்போது கை, கால்களில் அடிபடாமல் மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்கள்! எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் செய்வதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடி மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்ணும் பாராட்டும் கிடைக்கும். பூர்விகச் சொத்து விஷயங்களில் மற்றவர்களின் உதவியால், வர வேண்டியவை வந்து சேரும். காவல்துறை, இராணுவம், தீயணைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பிறருக்காகச் சொத்து, பண விஷயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் தன வரவு உண்டாகலாம். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் குழப்பம் அடைய வேண்டாம்! உற்றார், உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வீடு, வாகனம் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், நறுமணப் பொருள், பூஜைப் பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடும் மஞ்சள் ஆடை தானமும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக்கூடிய காலமாகும். கணவன் – மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம்! பிள்ளைகளால் பொருள் வரவும் நிம்மதியும் ஏற்படுவதோடு, அவர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிறைவு அடைவீர்கள். தாயின் உடல்நிலை பாதிப்புகள் இன்னும் சில காலம் வரை நீடிக்கும். காய்கறி, இலை போன்ற பொருட்கள் விற்பவர்கள், மர வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு ஆலய வழிபாடும் பச்சை ஆடை தானமும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author