இலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நேரலை நேர்காணலில் நிலா

சென்ற பிப்ரவரி மாதம் 21ம் தேதி, இலண்டன் தீபம் தொலைக்காட்சியின் நேர்காணலில் தோன்றினார் நிலா. ஐரோப்பாவில் நேரலையாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் பிரபஞ்ச சக்தி, மனித உளவியல், மனித ஆற்றல்கள், ஆன்ம உலகத் தொடர்பு, சுகமளிக்கும் உத்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார் நிலா. நிகழ்ச்சியில் நேர்காணல் செய்த அனஸ் மிக சுவாரசியமாக கேள்விகளைக் கேட்டு, ஓர் இயல்பான கலந்துரையாடலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஐரோப்பியவாழ் தமிழ் நேயர்களில் பலர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நேரலையில் பங்கேற்று தங்கள் கேள்விகளைக் கேட்டனர். மிக இயல்பாகவும், சுவைபடவும் நிகழ்ந்தேறிய இந்த நேர்காணல் நிலாச்சாரல் வாசகர்களுக்காக யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசகர்கள் காணலாம்; கவர்ந்திருப்பின் தங்கள் உற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

About The Author

1 Comment

Comments are closed.