காதல் ‘புண்’ மொழிகள்(1)!

மணவாழ்க்கை எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்தது.
திருமணமான முதல் வருஷம் அவன் பேசுகிறான், அவள் கேட்கிறாள்.
இரண்டாம் வருஷம் அவள் பேசுகிறாள், அவன் கேட்கிறான்.
மூன்றாம் வருஷம் அவர்கள் பேசுகிறார்கள், அக்கம் பக்கத்தவர் கேட்கிறார்கள்.

****

காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான். திருமணம்தான் கண்களைத் திறக்கிறது.

****

கல்யாணம் என்பது நண்பர்களோடு ஹோட்டலுக்குப் போவதைப் போன்றது. உங்களுக்கு வேண்டியதை நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள். ஆனால் பக்கத்திலிருப்பவர் சாப்பிடுவதைப் பார்க்கும்போது அதை ஆர்டர் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

****

எல்லா ஆண்களும் சமமானவர்களாகவும் சுதந்திரமாகவும் பிறக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சிலருக்குக் கல்யாணமாகி விடுகிறது!

****

அவன் சர்ச்சில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். அவனுக்குக் கல்யாணமாயிற்று. பிறகு தூக்கத்தில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். விவாகரத்து ஆயிற்று.

****

திருமணம் என்பது ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்குவதுதான். அவன் கொடுக்கிறான். அவள் வாங்குகிறாள்.

****

கல்யாணமாகும் வரை சந்தோஷம் என்பது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. கல்யாணமான பிறகு அது ரொம்ப லேட்!

****

காதல் என்பது ஒரு அழகான நீண்ட கனவு, திருமணம் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும் அலாரம்.

****

திருமணத்திற்கு முன்னால் ஒரு பெண்னின் கையைப் பிடிப்பது காதலினால் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரியாது. திருமணத்திற்குப் பிறகு அவள் கையைப் பிடிப்பது தற்காப்பிற்காகத்தான்!

****

புதிதாகக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் காரணம் என்ன என்று தெரியும், ஆனால் கல்யாணமாகிப் பத்து வருஷங்களுக்குப் பிறகு சந்தோஷமாயிருந்தால் அது ஏன் என்றுதான் தெரிவதில்லை.

****

About The Author

2 Comments

  1. jones

    அடுத்தவன் உன்னைப்பற்றி குறை கூறும்போது அதைப்பற்றி கவலைப்படாதே, கோபப்பாடாதே, மாறாக சிரித்துக்கொள் ஏனென்றால் உன்னைக்கண்டு அவனுக்கு பயம் வந்து விட்டது ஏன்று அர்த்தம்.

Comments are closed.