குறுங்கவிதைகள்

விடுதலை

சுதந்திரத்திற்காக
துப்பாக்கி ஏந்தினர்!
விடுதலை கிடைத்தது
உயிர்களுக்கு!

நாட்காட்டி

தாளைக் கிழிக்கும்போது
நெஞ்சில் நெருடல் !
"என்ன கிழித்தோம் இதுவரை?’

பிச்சை

பசி நேரத்தில் கிடைத்த
பிரசாதத்தைப்
பங்குபோட வந்தான்-
பிச்சைக்காரன் !
வேண்டாவெறுப்பாய்க்
கொடுத்ததை
அவன்
கண்களில் ஒற்றி
உண்டபோது
எனக்கும் போட்டான்
பிச்சை!

About The Author

2 Comments

  1. bharani

    நாட்காட்டி படிக்கையில் என் நெஞ்சத்திலும் நெருடல்! அருமையான கவிதைகள்.

  2. sankar

    அனைத்து கவிதைகளும் அருமை. ஸன்கர்

Comments are closed.