கேரட் குல்ஃபி

தேவையான பொருட்கள்:

கேரட் – 1/4 கி ,
பால் -1/2 லிட்டர்,
சர்க்கரை – 1/4 கப் ,
ஏலக்காய் – 2 .

செய்முறை:

கேரட்டை நன்றாகக் கழுவித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரை கப் பாலை சேர்த்துக் குக்கரில்  வேக வைக்கவும். பிறகு கேரட்டை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதி இருக்கும் பாலை அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி கேரட் கூழையும் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். சற்று இறுகியதும் சர்க்கரை , ஏலப்பொடி சேர்த்து குல்ஃபி மோல்ட்களில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். கேரட் குல்ஃபி தயார்.

About The Author