சப்பாத்திக்கு உகந்த பக்க உணவு – ‘டூ இன் ஒன்’ இஞ்சி புதினா பொடி

தேவையான பொருட்கள்:

புதினா – 3 கட்டுகள்
புளி – சிறிய எலுமிச்சையளவு
இஞ்சி – 50 கிராம்
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
சிகப்பு மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிதளவு
தேவையான அளவு உப்பு, தேவைக்கேற்ப எண்ணெய்.

செய்முறை:

புதினா இலைகளை நன்றாகக் கழுவி உலர வைக்கவும். இஞ்சியை நன்றாகக் கழுவி மேல் தோலை நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி சிகப்பு மிளகாய், புளி, தேங்காய்த் துருவல், பெருங்காயம் எல்லாவற்றையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். உலர்ந்த புதினாவை மட்டான தழலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். எல்லாவற்றையும் மிக்சியில் ஒன்றாகப் போட்டு கரகரப்பாகப் பொடிக்கவும். சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் உண்ணுவதற்கு சுவையாக இருக்கும்.”

About The Author