சப்பாத்திக்கு உகந்த பக்க உணவு – சம்பந்தி சட்னி

தேவையான பொருட்கள்:

அதிகம் புளிப்பில்லாத மாங்காய் – 1
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கொத்துமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 4
கடுகு, உளுத்தம் பருப்பு, ஜீரகம் – சிறிது (தாளிக்க)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மாங்காயைத் தோலுடனோ அல்லது தோலை நீக்கியோ துருவிக் கொள்ளவும். துருவிய மாங்காயுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள், நன்றாகக் கழுவிய கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும். இறுதியாக, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஜீரகத்தைத் தாளித்து சேர்க்கவும். இச்சட்னி, சப்பாத்தியோடு இட்லிக்கும் பொருந்தும்.”

About The Author