சித்திரைப் பெண்

எண்ணமெல்லாம் நிறைவேற
இன்பமெல்லாம் கைகூட
மனமெல்லாம் மகிழ்ந்திருக்க
மகிழ்ச்சி எங்கும் நிறைந்திருக்க
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வசந்தத்தின் முத்திரைப்பொன்!!

வாசலெங்கும் வண்ணக்கோலம்
வீதியெங்கும் தோரணம்!
ஊரெங்கும் விழாக்கோலம்
உலகமெலாம் குதூகலம்!
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வசந்தத்தின் முத்திரைப்பொன்!!

எண்ணம் ஏற்றம் பெற்றிட
நன்மை நாடி சேர்ந்திட
அமைதி உலகில் நிரம்பிட
அன்பு, கருணை பெருகிட
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வாழ்த்திடுவோம்!வளம் பெறுவோம்!!

About The Author

1 Comment

 1. சிம்மபாரதி

  எழுதுகோல்
  எழுதும் போதே தெரியும்
  எழுதுகோலுக்கு தான்
  அழுகிறோமென்று – இருந்தும்
  எழுதுபவர் மகிழ்கிறாரென
  அழுதுகோண்டே இருக்கிறது.
  – சிம்மபாரதி (reachsimma@gmail.com)

Comments are closed.