சிரிக்க மட்டும்

ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது.

********

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்… இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கனும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை…உங்களுக்கு..

********

புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!??

********

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

********

About The Author

11 Comments

 1. SUBBASHINI

  இந்த கதை ரொம்பெ நல்ல இருக்கு.எனக்கு ரொம்பெ பிடிசிருக்கு

 2. Mahi

  //ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.// அது என்னென்ன அப்படின்னு என் கணவர்கிட்ட கேட்டேன்..கரெக்ட்டா இதே மூணு பதிலயும் சொல்லிட்டாருங்க தேவி.
  ஆண்கள் எல்லாருமே கரெக்ட்டா பதில் சொல்லிடுவாங்க போல,இந்த கேள்விக்கெல்லாம்!!! எ.கொ.ச.இ?

 3. sathish

  ரூம் போட்டு யோசிப்பிங்ளோ!!!!!!!!!!!!!!!!!!!!

Comments are closed.