சிரிச்சு வாழ வேணும்

கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டிருந்த மனைவி சோகமாகச் சொன்னாள் கணவனைப் பார்த்து, "நான் எவ்வளவு அசிங்கமாயிட்டேன், எனக்கே என்னைப் பார்க்கப் பிடிக்கல்லை, என் மனசுக்கு ஆறுதலா ஏதாவது சொல்லுங்களேன்"

அவன் சொன்னான், "அடே! உன் கண்பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கு!"

****

அப்பா கோபமாகப் பையனிடம் கேட்டார், "ஏண்டா. எல்லாப் பாடத்திலேயும் சைபர் வாங்கியிருக்கே"

"அப்பா, அது சைபர் இல்லேப்பா, என் மார்க்கையெல்லாம் பார்த்து டீச்சர் ‘ஓ’ போட்டிருக்காங்க!"

****

"காபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்டே?"

ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.

****

ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?

ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?

****

முதல் திருடன்: அட! போலீஸ் வர்ற சத்தம் கேக்குது, சீக்கிரம் குதிச்சுடலாம், வா.
இரண்டாவது திருடன்: அதெப்படி முடியும்? நாம 13வது மாடிலே இருக்கோம்.
முதல் திருடன்: சீக்கிரம் குதி, இப்போ போய் மூட நம்பிக்கையெல்லாம் பார்த்துகிட்டு.

****

அவள்: என்னை உண்மையா லவ் பண்றீங்களா? எனக்காக உயிரையும் கொடுப்பீங்களா?
அவன்: கண்டிப்பா, நமது காதல் சாகாத காதலாச்சே!

****

பையன்: அப்பா, வாசு ஸ்கூல்லே ரொம்ப அடிக்கிறாம்பா.
அப்பா: ஏன், டீச்சர் கிட்டே சொல்ல வேண்டியதுதானே?
பையன்: வாசு தாம்பா டீச்சர்.

****

சினேகிதி: ஏன் ராத்திரிலே வாசல் கதவைத் திறந்து வைக்கிறே?
அவள்: என் மாமியாருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதியாச்சே.

****

சில தத்து (பித்து)வம்
ஓட்டப் பந்தயத்திலே கால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் ஃபிரைஸ் என்னவோ கைக்குத்தான் கிடைக்கும்.

ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தாலும் பாஸ்ட் ஃபுட் கடையிலே நின்னுகிட்டேதான் சாப்பிடணும்.

****

About The Author

3 Comments

Comments are closed.