சென்ரியூ – நகைப்பாக்கள் (5)

பால் காய்ச்சித்தான்
குடித்தனம் போக வேண்டும்
சாராயம் காய்ச்சுபவனும்!

***

நிறைய மிட்டாய்கள்
வாங்கித்தரும் தாத்தாவிற்கு
பாவம் பல்லே இல்லை!

***

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

***

யாருடைய ஆசியோ?
உயர்ந்து கொண்டே போகிறது
விலைவாசி

***

பகுத்தறிவு இல்லாதவனின்
உலக அனுபவம்
வெங்காயம்

***

சுருக்கமாகப்
பேசி முடித்தார்
விரிவுரையாளர்!

About The Author

4 Comments

 1. கருவெளி" ராச.மகேந்திரன்"

  நண்பராக

  தங்களது படைப்புகள் அனைத்தும் மிக அருமை…
  தாங்கள் விரும்பினால் என்னுடைய நட்பு வட்டாரத்தில் தாஙளும் இணைந்து கொள்ளலாம்.
  என்னுடைய படைப்புகளை கருவெளியில் நீஙள் வாசிக்கலாம். பிறகு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.
  எழுத்துக்களை வாழ்வில் நடைமுறை படுத்துபவராய் இருந்தால் நான் இன்னும் சந்தோசம் கொள்வேன் உஙள் நட்பு கிடைப்பதில்..
  நன்றிகளுடன் கருவெளி ராச.மகேந்திரன்

 2. N Gowthaman

  உங்களது கவிதைகள் அனைத்தும் மிக அருமை

Comments are closed.