ஜோதிடம் கேளுங்கள்

மேலதிகாரிகளால் பல இன்னல்கள் பட்டு கடந்த அக்டோபர் மாதம் வேலையை இழந்தேன். மீண்டும் எப்போது வேலை கிடைக்கும்? – அரவிந்த், திண்டுக்கல்

அன்பு நிலாச்சாரல் வாசகர் அரவிந்த் அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில், தொழில் ஸ்தானமாகிய 10-ம் வீட்டீற்கு குருவின் பார்வை இருப்பதால், உங்களின் தொழில் வளம் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல வேலை கிடைத்து விடும். வேலை இல்லாத தொல்லை நீங்க, "சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே! குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ, மங்களச் செவ்வாய் மலரடி போற்றி, அங்காரகனே அவதிகள் நீக்கு" என்ற பாடலைப் படித்து, முருகனை தரிசித்து வாருங்கள். விரைவில் தாங்கள் நல்ல வேலையில் அமர நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****

கடந்த எட்டு வருடங்களாக மனம் நிம்மதியாக இல்லை. எப்போது நல்ல வழி கிடைக்கும்? – விஜயரத்னம் விக்னேஸ்வரன், பாயிண்ட் பெட்ரோ, ஜாஃப்னா

அன்பு நிலாச்சாரல் வாசகர் விஜயரத்னம் விக்னேஸ்வரன் அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், 9, 12 வீடுகளுக்கு உரிய புதனும், 11-ம் வீட்டுக்கு உரிய சூரியனும், 9-ல் வீட்டிலிருந்து கொண்டு குருவின் பார்வையைப் பெறுவதால், தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மன அமைதி பெற, " வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும், வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே, அப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய, தொப்பை யப்பனைத் தொழ வினையறுமே" என்ற விநாயகர் பாடல் படித்து, அருகம்புல் தூவி வழிபட்டு வாருங்கள். சிறப்பான வாழ்க்கை அமையவும், மன நிம்மதி பெறவும் நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

****

வேறு நாட்டுக்குச் சென்று வசிக்க விரும்புகிறேன். அது நல்லதாய் அமையுமா? சொந்த வீடு வாங்க முடியுமா? – பவானி, கொழும்பு, ஸ்ரீலங்கா

அன்பு நிலாச்சாரல் வாசகி பவானி அவர்களே!
59 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் கடகம் ஆகும். 11-ம் வீடு குருவின் பார்வை பெறுவதால், வெளி நாட்டில் தாங்கள் விரும்பிய வாழ்க்கை அமையும். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய், சனியுடன் சேர்ந்திருப்பதால், சிறிது காத்திருத்தலுக்குப் பின் சொந்த வீடு அமையும். தாங்கள் விரும்பிய வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.