ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய தொழில் பற்றிச் சொல்லுங்கள். காலசர்ப்பதோஷம் உள்ளதா? – ரமேஷ், கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரமேஷ் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்கள் ஜாதகத்தில், தொழில் வளத்தைக் குறிக்கும் 10-ம் வீட்டில் குருவும்,சூரியனும் சேர்ந்து இருப்பதால், சிறப்பான முன்னேற்றம் உண்டு. தாங்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் பணியில் உள்ள குறைகளைக் களைந்து புதிய உத்திகளைப் பயன்படுத்தினால் உயர்வான நிலைக்கு வருவீர்கள். அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் இருப்பதுதான் கால சர்ப்ப யோகம் அல்லது தோஷம் என்ற நிலையை உருவாக்கும். தங்கள் ஜாதகத்தில் கேது மகரத்திலும், ராகு கடகத்திலும் உள்ளார்கள். சுக்ரன் ராகு இருக்கும் கட்டமான கடகத்தைத் தாண்டி மிதுனத்தில் உள்ளதால், தங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இல்லை. சிறப்பான தொழில் வளம் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

எனக்கு திருமணத்திற்க்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வரன் வந்திருக்கிறது. எங்கள் இருவருக்கும் திருமண பொருத்தம் உள்ளதா என பொருத்தம் பார்த்து கூறவும் – லிங்கம், கன்னியாகுமரி

அன்பு நிலாச்சாரல் வாசகர் லிங்கம் அவர்களே!
தாங்கள் அனுப்பிய ஜாதகங்கள் இரண்டுக்கும் பொருத்தம் உள்ளது. தங்களுக்கு சிறந்த மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

நான் தற்போது பார்த்து வரும் வேலையிலிருந்து விலகலாமா? இடப்பெயர்ச்சி நன்றாக அமையுமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புண்டா? வாய்ப்பு இருந்தால் அது எப்போது? – ஆரோக்னி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஆரோக்னி அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி மகரம் லக்னம் கன்னி ஆகும். தாங்கள் தற்பொழுது இருக்கும் வேலையிலேயே இருப்பது நல்லது. செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. மனம் போல் வாழ்வு பெற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

நான் எப்போது பெரிய சினிமா டைரக்டராக ஆவேன்? அல்லது வேறு என்னவாக ஆகலாம்? – ஹிதாயத், பட்டுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஹிதாயத் அவர்களே!
26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை ஆகும். தாங்கள் தங்கள் சொந்த முயற்சியால், விரும்பியவாறு கலைத்துறையில் நன்கு பரிமளிப்பீர்கள். தங்கள் கலைத்துறைப் பயணம் நன்கு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

3 Comments

  1. Arokia selvam

    யென் பெயர் ஆரொகிய செல்வம். யென்க்கு சில காலமாக வாயு பிரசனை அதாவது இடது பக்கம் நெஞ்ஜு வலி இருந்து கொன்டெ இருகிரது சமிபகாலமாக வியபாரத்தில் தடைகல் Yஎர்படுகிரது யெனக்கு யெனக்கு திருமனம் ஆகியிருக்கிரது யெந்த காரத்தினால் இவ்வாரு நடக்கிரது யென்ரு தெரிவியுஙல்

  2. mohanraj

    we are looking allanice for me past 6 month but still not yet any allanice come.when i will get marranige pl advice

Comments are closed.