ஜோதிடம் கேளுங்கள்

லக்னத்தில் இருந்து ஏழாவது ஸ்தானத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்..? சுதா, தஞ்சாவூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி சுதா அவர்களே !

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி. ராசி மேஷம். லக்னம் மீனம். தங்களின் ஜாதகத்தில் 7-ல் சனியும், செவ்வாயும் இணைந்துள்ளனர். தாங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் மிதமாக இருப்பதோடு தங்களின் மாத ருது சுழற்சி சரியாக இருக்குமாறு பராமரித்துக் கொண்டால் எந்தப் பிரச்னையும் இராது. வீண் கவலைவேண்டாம். சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

இப்பொழுது தனியார் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிகிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? வேலைக்கேற்ற ஊதியம் எப்போது கிடைக்கும்..? கயல்விழி, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி கயல்விழி அவர்களே !

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம். ராசி கும்பம். லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகப்படி தற்போது குரு திசை, சூரிய புக்தி 22-07-2010 வரை நடைபெறும். இதற்குப் பிறகு வரும் சந்திர புக்தியில், அரசின் உதவி அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைப்பதோடு வேலைக்கேற்ற நல்ல ஊதியமும் கிடைக்கும். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

பதில் அளித்தவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author