தரமற்ற வாழ்க்கைமுறையே தூக்கமின்மைக்குக் காரணம்!

பகல் நேரத்தில் துடிப்பாக வேலை ஆற்ற முடியாமல் தூக்கம் வருவது போன்ற உணர்வு, இரவில் சரியான தூக்கமில்லாமல் அவதிப்படுதல் ஆகியவற்றிற்கு காரணத்தைப் புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்து அறிவித்துள்ளது. இதை உலகின் பிரபல விஞ்ஞான பத்திரிக்கையான ஸயின்ஸ் டெய்லி தனது ஆகஸ்ட் 1, 2009 இதழில் வெளியிட்டுள்ளது.

“ஸ்லீப்” – தூக்கம் என்ற பெயரிலேயே உள்ள பத்திரிக்கையின் ஆய்வையே ஸயின்ஸ் டெய்லி அப்படியே மீண்டும் வெளியிட்டுள்ளது.தரமற்ற உடல் மற்றும் மனத்தைக் கொண்டு வாழும் வாழ்க்கை தரமான தூக்கத்தைத் தராது என்று இந்த ஆய்வு அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

உடல் மற்றும் மனத்தின் தரங்களைக் கண்டுபிடிக்க சமீப காலத்தில் Mental Component Summary (MCS) scales மற்றும் Physical component summary ஆகிய அளவு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆய்வு மாதிரிகளில் மென்டல் காம்பொனன்ட் சம்மரி அளவுகளை (Mental Component Summary (MCS) scales) மாற்றினால் தூக்கம் சரியாக உரிய நேரத்தில் வருவதுமில்லை அது நீடிப்பதுமில்லை. பகல் நேர தூக்க அளவுகள் எப்வொர்த் ஸ்லீப்பினெஸ் ஸ்கேல்
(Epworth Sleepiness Scale) என்ற அளவையில் அளக்கப்படுகிறது. இந்தப் பகல் நேரத் தூக்க உணர்வு MCS அளவுடன் தொடர்பு கொண்டதாக இருப்பதோடு பிஸிகல் காம்பொனனட் சம்மரி எனப்படும் உடல் தகுதி அளவுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

முறையற்ற சுவாசம் உள்ளவர்களும் தூக்கமின்மை வியாதியால் அவதிப்படுவர். அரிசோஜோனா ஸ்டேட் யுனிவர்ஸிடியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் க்ரேசிலா ஈ.சில்வா இந்த ஆய்வின் முடிவுகள், தூக்கத்திற்கும் தரமான வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆச்சரியம் தரும் புதிய உண்மைகளை அறிவிக்கிறது என்கிறார்.

தரமான தூக்கம் வேண்டுமென்றால் தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே ஆய்வின் முடிவு வலியுறுத்துகிறது!

சாதாரணமாக, உடல் பருமன், இதய நோய் சுவாச சம்பந்தமான நோய் ஆகியவை உடல் தகுதியை மோசமாக பாதிக்கின்றன.

ஆகவே இவற்றைக் கொண்டுள்ளோர் அதை முதலில் நீக்கினால், தரமான வாழ்க்கை அமையும்; தூக்கத்தின் தரமும் அதிகரிக்கும் என்கிறனர் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.

சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில் தூங்கலாம்; பகலில் சக்தியுடன் வேலை பார்க்கலாம்!

About The Author

3 Comments

 1. S.Gnanasambandan

  நல்ல தூக்கத்துக்கு வழி சொன்ன உங்களுக்கு நன்றி
  ஞானசம்பந்தன்

 2. Rishi

  நன்றி நாகராஜன் சார்.
  எனக்கு 10 மணிக்கு ஷார்ப்பா தூக்கம் வந்துருது. 6 மணிக்கு எழுந்திரிச்சடறேன்.

 3. kannan

  ஒரு நல்ல தகவல் என்னைப்போல் உல்லவர்கலுக்கு நல்ல ஒரு தகவல்.

Comments are closed.