தவத்திரு தத்தாத்ரேய சிவபாபா அவர்களுடன் ஒரு நேர்முகம

இந்தியாவில் வளர்ந்து இப்போது அமெரிக்காவில் வாழ்கின்ற தத்துவ ஞானி தவத்திரு தத்தாத்ரேய சிவபாபா அவர்கள் ஆன்மீகத்தின் பல பரிமாணங்கள், அறிவியல் ஆன்மிக இணைப்பு, வேத சோதிடம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவருகிறார். மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே தடையாக இருப்பது மாயை, கர்மம், அகங்காரம் என்று சொல்லுகிற சிவபாபா. அறிவோடும் ஆற்றலோடும் வாழும் முறைமைகளை தியானங்கள் மூலம் பெறலாம் என்று கனிவுடன் சொல்லி வருகிறார். த்ரிபுரா அறக்கட்டளை மூலம் நலிந்தவர்களுக்கு நல்ல பல பணிகளும் செய்து வருகிறார் சிவபாபா அவகள். அவருடன் ஒரு நேர்முகம்.

ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற பல உத்திகளைக் கற்பித் வருகிறீர்கள் – இந்த உத்திகளை எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்?

இதை நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. திருவள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார் அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை, பொருளில்லாருக்கு இவ்வுலகம் கிடையாது என்று – அருள் வேண்டுமானால் அருளாளர் ஆகலாம் – பொருள் வேண்டுமானால் இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகலாம். இது இரண்டையும் சேர்க்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. புத்தர் இந்த உலகவாழ்க்கை வேண்டாமென்று துறவறம் போய்விட்டார் – இது முழுமையான வாழ்க்கை ஆகாது. அருள் பொருள் இரண்டையும் இணைத்து வள்ளுவர் சொல்லியிருக்கிறார், ‘இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்; பலர் நோலாதவர் பலர்’.

வறுமை என்பது இன்றுமட்டுமல்ல – 2000 ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் காலத்திலிருந்தே வறுமை இருந்திருக்கிறது. இல்லாதவர்கள் அதிகமானவர்களாக இருப்பதற்குக் காரணம், தியானம் செய்பவர்கள் சிலராகவும் தியானம் செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதுதான். தியானம் செய்யக்காரணம் அறிவையும் ஆற்றலையும் பொருளையும் வளர்ப்பதற்காகத்தான். அதனால்தான் யக்ஞம் செய்தார்கள் – யக்ஞம் செய்யும்போது ஒரு குறிப்பு இருக்கும்- ஒரு காரியம் நிறைவேறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கீதையில் கூட அர்ஜுனன் ‘எனக்கு நிறையப் பணம் வேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கண்ணனைக் கேட்கிறார், கண்ணன், "இஷ்டம் போகான் யக்ஞார்த்தாத் கர்மனஹ" என்று சொல்கிறார். "உனக்குப் பொருள் வேண்டுமானால் அதை வேண்டி யக்ஞம் செய் – ஆனால் வருகின்ற பொருளை நீ மட்டும் வைத்துக்கொண்டு உனக்காகச் செலவழிக்காதே – அப்படி செலவழித்தால் வெயில்கால மேகம் போல அது விரைவிலேயே விலகி விடும். நம் தமிழர்கள்கூட ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்று சொல்லியிருக்கிறார்கள் அந்தக்காலத்தில் கடல் கடந்து சென்று கிரேக்க ரோமானிய நாடுகளோடு வியாபாரம் செய்தார்கள் . அதனால் அருளையும் பொருளையும் பிரிக்கக்கூடாது – தியானம் எதற்காகச் செய்கிறோம்? அறிவையும் ஆற்றலையும் பெருக்கத்தான் – அதனால் பொருள் வளரும் – இதுதான் எனது கொள்கை.
  
வெற்றிக்கான மந்திரங்கள் குறித்து ஒரு மின்னூல் வெளியிட்டிருக்கிறீர்கள் – இந்த மந்திரங்களால் பயனுடா?

நிச்சயமாகப் பயனுண்டு – பயனில்லாத ஒன்றையும் நான் சொல்வதில்லை – திருமூலரே சொல்லியிருக்கிறார் அரகர என அரியதொன்றில்லை மானிடரே என்று சொல்லியிருக்கிறார் – இவரும் 2000 ஆண்டுளுக்கு முன்னால் வாழ்ந்தவர் – அப்போதும் இந்த மந்திரத்தின் பெருமையை மானிடர் உணரவில்லை என்று சொல்கிறார். இப்போது பத்து பன்னிரண்டு ஆண்டுகளாகத்தான் தமிழர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். ‘அ’ என்பது ஆசையைக் குறிக்கும் ஆசையிருந்தால்தான் மனிதன் ஆசையே இல்லாவிட்டால் எப்படி முன்னேற முடியும்- புத்தருக்கு ஆசையில்லை – இல்லற வாழ்க்கையை, ராஜ்ஜியத்தை விட்டுப்
போய்விட்டார்.

மனிதனுக்கு முன்னேறவேண்டும் என்ற ஆசையிருக்கவேண்டும். அரகரவில் இரண்டாவதுஎழுத்து ‘ர’ ஆற்றலைக் குறிக்கும் – ‘க’ – பொருளைக் குறிக்கும் அடுத்த ‘ர’ மறுபடியும் ஆற்றலைக் குறிக்கும். இந்த ‘அரகர’ எனும் மந்திரத்தைத்தான் நான் சொல்லச் சொல்கிறேன். ஒருவர் என்னிடம் வந்து, "ஐயா, நான் அரகர மந்திரத்தை ஒரு வருஷமாகச் சொல்கிறேன் ஒன்றும் பயனில்லையே" என்று. நான் ‘ஒரு வருஷம் சொல்லியும்பயனில்லை என்றால் விட்டுவிடவேண்டியதுதானே, ஏன் இன்னும் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

நான் இந்த மந்திரத்தை 90 நாட்கள்தான் சொல்லச் சொல்கிறேன். அப்புறம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று சொல்லுவதால் என்ன பயன் விட வேண்டியதுதானே – அதற்காக ஒரே ஒருதடவை அரகர என்று சொல்லிவிட்டுப் பொருள் வரவில்லையே என்று சொல்வது நியாயமில்லை – தர்மம் கிடையாது – எதையும் ப்ராக்டிகலாகப்பார்க்க வேண்டும்.
  
தங்கள் வாழ்க்கைப்பயணம் ஆன்மீகவழியில் இருக்கும் என்று சிறுவயதில் எதிர்பார்த்தீர்களா?

ஆமாம். சிறுவயதிலிருந்தே எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தது. மூன்றாவது வகுப்பு படிக்கும்போதே புத்தர் படத்தை வைத்துக்கொண்டு வழிபடுவேன். தியானத்தில் ஈடுபடுவேன். அதோடு நான் ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு வாய்ப்பு அதிகமிருந்தது – நான் ஆன்மீகத்தில்தான் ஈடுபடுவேன் என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று.

நாடி ஜோதிடத்தின்மீது வலுவான நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறீர்கள் – கர்மாவுக்கான பரிகாரங்கள் தமிழகத்திலுள்ள இந்து ஆலயங்களில் நடத்தப்படுவதால் இந்த ஜோதிடமுறையை எப்படி மொத்தமனித குலத்திற்கும் உகந்தததாகக் கருத முடியும்?

நாடி ஜாதகம் என்பது எல்லாருக்கும் கிடைக்காது. உலகத்தில் மொத்தம் ஆறு பில்லியன் மக்கள் இருந்தால் அதில் ஒரு மில்லியன் பேருக்குத்தான் நாடி ஜாதகம் இருக்கும்- நாடி ஜாதகம் படிப்பவர்கள் மொத்த 200 பேருக்குமேல் இருக்க மாட்டார்கள்.
  
நாடி ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாரிடமும் நம்பிக்கை வைக்க முடியுமா? உதாரணமாக வைத்தீஸ்வரன்
கோயிலில் நாடி ஜோடம் பார்ப்பதாகப் பலர் சொல்கிறார்களே?

எல்லாரும் சரியானவர்கள் என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 75 சதவிகிதம் நம்பிக்கையானவர்கள் – வைத்தீஸ்வரன் கோயிலில் இதைப் பலர் வியாபாரமாகச் சொல்கிறார்க – பரிகாரம் என்ற பெயரில் 50000, 60000 கேட்கிறார்கள் – இதையெல்லாம் நம்பக்கூடாது. நாடி ஜோதிடம் எழுதிய அகஸ்தியர், பிருகு முனிவர் மற்றும் போகர் போன்றவர்கள் இதை பணத்துக்காக எழுதவில்லை – அவையெல்லாம் இடைச் செருகல்தான். ஜோதிடத்தில் வல்லவரான ஜி. வி ராமனே இது உண்மைதான் என்று எழுதியிருக்கிறார்.

உங்களுக்கு நாடி யிருந்தால் தான் அதைத்தேடிப்போக முடியும் – நாடியில் விதியிருந்தால் தான் அவர்களால் வரமுடியும் – ஒருநிமிஷம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் வந்தாலும் முடியாது – ‘அவர் வருவார், படிக்கவேண்டும்’ என்பது விதிக்கப்பட்டிருக்கும்.

கர்மாவினால் வரும் வினைகளை இந்தப்பிறவியில் இல்லையெனில் அடுத்தடுத்த பிறவிகளிலாவது அனுபவித்தே தீரவேண்டும் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?

கர்மம் என்பது உண்மைதான் நமது உடம்பே, அதற்கு வரும் வியாதிகளே கர்மம்தான். அதற்கு சாப்பிடும் மருந்துகளும் கர்மம்தான். படிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமில்லை – நன்றாகப் படிக்காத பில் கேட்ஸ் உலகத்திலேயே பெரிய பணக்காரராக இருக்கிறார் – காமராஜர், கருணாநிதி ஜெயலலிதா யாரும் அதிகம் படித்ததில்லை ஆனால் அவர்கள்தான் யுனிவர்சிடி துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் – ராஜயோகம் இருந்தால் வரவேண்டியது வந்தே தீரும் – அதுவும் கர்மம்தான். அமெரிக்காவில் என்னோடு பி. ஹெச்டி படித்தவர் அங்கு வெள்ளை அடிக்கும் தொழிலில் இருக்கிறார் – எல்லாமே அவரவர் கர்மம்தான்.

அதற்காக கர்மம் என்று சும்மா யிருக்கக்கூடாது அதுதான் திருவள்ளுவர் ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர் என்று சொன்னார். நல்ல கர்மம் இருந்தால் யோகம் நம்மைத்தேடி வரும் இல்லையென்றால் நாம் அதைத்தேடிப் போகவேண்டும்.
  
மேலை நாடுகளில் கவர்ச்சி விதி (Law of Attraction) புதுயுகம் (New Age) போன்ற தத்துவங்கள் பிரபலமாகிவருகின்றன- இவற்றைக்குறித் தங்கள் கருத்து என்ன?

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் அனைவரிடமும் பணம் இருக்கிறது, வசதியிருக்கிறது இதற்குமேல்
ஏதாவது ண்டும். 9/11 நிகழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க மக்களிடையே பாதுகாப்பின்மை அதிகமாகிவிட்டது – இந்தப் பணமும் வசதிகளும் தீவிரவாதத்திலிருந்து பாதுகாப்பைக் கொடுக்காது – அதற்குமேல் பாதுகாப்பு ண்டுமென்றால் இறைவனைத்தான் நம்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஈராக்கில் பில்லியன் கணக்கில் தினமும் செலவு செய்யப்படுகிறது – ஆனால் தினமும் பலர் தீவிரவாதிகளால் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் கடவுள்தான் தீர்வு சொல்லவேண்டும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகிறது.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக்குப் பொறுப்புஎடுத்துக்கொள்ளவேண்டும் என்ற தத்துவம் சில சமயம் சர்ச்சைகளைக் கிளப்பிவிடுகிறதே! உதாரணமாக 9/11 சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ங்களே அத்தகைய துன்பத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்று சொல்லும்போது ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறதே!

அமெரிக்காவில் பில்லி கிராம்ஸ் என்ற பெரிய மதத்தலைவரிடம் வெள்ளை மாளிகையில் ‘கடவுளுக்கு 9/11
நிகழ்ச்சி நடக்கப்போவது தெரியுமா?’ என்றுகேட்டார்கள் – அவர் – ‘கடவுளுக்குத்தெரியாது என்று சொன்னால் நான் முட்டாள் – அவருக்கு நிச்சயமாகத்தெரியும்’ என்றார். ‘அப்போது ஏன் கடவுள் அவர்களைக் காப்பாற்றவில்லை?’ என்று கேட்டபோது, ‘அது எனக்குத் தெரியாது’ என்றார். இதெல்லாம் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் – பின்லேடனின் தீவிரவாதச் செயல்களைக் கடவுள்தான் தூண்டிவிட்டாரா என்பது போன்று குதர்க்கமாகக் கேள்விகள் கேட்கக்கூடது – 9/11 ல்இறந்த 3000 பேர் நல்லவர்கள் – ஒன்றும் அறியாதவர்கள்தான். அவர்கள் இறந்தது முன் ஜன்ம வினை – இது அறிவுக்கு அப்பாற்பட்டது – அவர்களது ஆன்மாவிற்குத் தெரிந்திருக்கும்.
  
தலைவிதி என்பது பொய்யென்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முழு ஆற்றலும் உண்டு என்றும் சொல்லப்படுவதுசரிதானா? எனில் பிரம்மன் எழுதும் எழுத்து என்று நாம் அறிந்ததெல்லாம் பொய்யா?

தலையெழுத்து என்பது நிச்சயம் உண்டு – ஆனால் அதே சமயம் அந்த தலையெழுத்தை மாற்றவும் முடியும் – ‘அவன் காலடிபட்டு அழிந்தது அயன் தலைமேல் எழுத்தே’ என்று முருகன் கால்பட்டு தலைஎழுத்து அழிந்ததாகக் கூறுகிறார்கள். தலையெழுத்தினால்தான் ஒருவர் பிரதம மந்திரியாகவும் இன்னொருவர் வீடு கழுபவராகவும் இருக்கிறார். இதைத்தான் திருவள்ளுவரும் சொல்கிறார் "அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை" என்று. ஒருவன் சிவிகையின் உள்ளே பயணம் செய்கிறான் இன்னொருவன் அதைச் சுமக்கிறான் இது. அது அவரவர் கர்மம் ஆனால் தூக்கிக்கொண்டு போகிறவன் தலையெழுத்தையும் மாற்ற முடியும் – இந்தக்கேள்விக்கு பதில் தலையெழுத்து என்று ஒன்று இருக்கிறது – ஆனால் அதை மாற்றவும் முடியும் என்பதுதான்.
  
எத்தனையோ ஆன்மீகவாதிகளையும் தத்துவங்களையும் இந்த உலகம் கண்டுவிட்டது – கண்டுவருகிறது. இதனால் சாமானியன் குழம்பிவிடமாட்டானா?

நிச்சயமாகக் குழம்பத்தான் செய்வான் இந்தக் குழப்பத்திலிருந்து மீள்வதற்கு ஒரே வழி சரணாகதிதான். அறிவாளியான அர்ஜுனனே கண்ணன் கர்ம யோகம், பக்தி யோகம் சாங்கியயோகம் என்று சொன்னபோது குழம்பிவிட்டான். அப்போதுதான் கண்ணன் தன் விஸ்வரூபத்தைக்காட்டினார். அர்ஜுனனிடம் ‘இதுவரை என்னை உன் மைத்துனனாகவே பார்த்தாய் – நான் உன் மைத்துனன் இல்லை’ என தன் விஸ்வரூபத்தைக்காண ஞானக்கண்யும் கொடுத்தார் – அவரது விஸ்வரூபத்தை சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாது – எனவே குழப்பம் தீர ஒரே வழி முழு சரணாகதிதான், தமிழில் கூட ஒரு பாட்டு உண்டு ‘கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்று – அப்படிப்பட்ட முழுபக்தி, சரணாகதிதான் தேவை.
  
உலகில் பல குழந்தைகள் உணவில்லாமல் மடிய நேரிடுகையில் யாகங்களில் பொன்னையும் பொருளையும் கொட்டுவது சரியல்ல என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே! தங்கள் கருத்தென்ன?

யாகங்களில் போடுவதினால் பயனில்லை என்று சொல்ல முடியாது. பகவத் கீதையில் பகவானே சொல்கிறார்.
ஒருபங்கு போடுவதைப்போல நூறுபங்கு வரும் யாகங்களினால் சுபிட்சம்தான் வரும் – இதைக்கொண்டு வறுமையிலுள்ளவர்களுக்கு உதவலாம் எனவே யக்ஞங்கள் வளர்க்கவேண்டும் என்பதுதான் சரி.
  
இந்திய சாஸ்திரங்களும் தத்துவங்களும் மேற்கில் பிரபலமாகிவருவது குறித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்து
கொள்வீர்களா?

ஆன்கத்தில் இந்தியாதான் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் தாய் அல்லது தந்தை நாடாக இருக்கிறது – இந்தியர்களுக்கு இணையான அறிவு படைத்தவர்கள் உலகில் யாரும் கிடையாது. உதாரணமாக ஒருவரது கைரேகையைவைத்து நாடி ஜோதிடம் சொல்லும் முறையை அவர்கள்தான் கண்டார்கள் – நமது ரிஷிகளுக்கு இருந்தது பேரறிவு. இந்தப் பேரறிவிற்குத்தான் உலக அளவில் மரியாதை கொடுக்கிறார்கள்- அது வளர்ந்து வருகிறது.
  
தாங்கள் கற்றுத்தரும் வாழ்க்கைத் தத்துவம் என்ன?

200 சதவிகிதம் வாழ்க்கை – நாம் நமது வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டும் – இமயமலையில் போய் தவம் செய்வதோ அல்லது புத்தரைபோல ராஜ்யத்தைத் துறந்துபோவதோ வாழ்க்கையில்லை என்பது என் கருத்து. பொருள் ஈட்டவேண்டும் அந்தப்பொருளைக் கொண்டு மற்வர்களுக்கு சேவை செய்யவேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை. அருளும் வேண்டும் பொருளும் வேண்டும்
  
போலி ஆன்கவாதிகளை அடையாளம் காணுவதெப்படி?

அவரவர்கள் கண்டுபிடிக்கவேண்டியதுதான். உண்மையான ஆன்கவாதிகள் மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் போன்றவர்கள்தான். நாயிற்கடையன நாயேனை என்று தன்னைத் தாழ்த்தி சொல்லி, ‘எனக்கு அருள் இன்று வருமோ இல்லை நாளை வருமோ, என்று வருமோ; என்று அருளுக்காக காத்து பணிவோடு இருப்பவர்கள்தான் ஆன்கவாதிகள் – கண்ணப்பன் வேடனாயிருந்தபோது கூட தன் கண்கள் இரண்டையும் இறைவனுக்கு அர்ப்பணித்தான். இது போல இறை அன்பைப் பெற நினைப்பவர்கள்தான் உண்மையான ஆன்மீக வாதிகள். இல்லாமல் ஆசீர்வாதம் செய்கிறேன் என்று கையைத் தூக்கி நிற்பவர்க்ள் உண்மையான ஆன்மீகவாதிகள் இல்லை.
  
உலகில் சமாதானமும் அமைதியும் திரும்ப வாய்ப்பிருப்பதாக நினைக்கிறீர்களா?

ஆமாம் நிச்சயம் 2011க்குப்பிறகு உலகம் மாறும். ஆனால் அது மனிதனுடைய முயற்சியால் அல்ல – கடவுளின் கருணையால்தான் அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
  
தாங்கள் பெரிதும் மதிக்கும் ஆன்மீகவாதி யார்?

இன்றைய அளவில் ஆன்மீகவாதிகளின் தரம் குறைந்துதான் இருக்கிறது – யார்மீதும் உள்ள விரோதத்தினால்
இதைச் சொல்லவில்லை – பழங்கால சித்தர்கள், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், துர்வாசர் அல்லது அப்பர், சுந்தர,
மாணிக்கவாகர் மாதிரியான ஆன்மீகவாதிகள் இப்போது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
  
உலகில் வன்முறை தலைவிரித்தாடுகிறதே? வன்முறை ஒழிய என்ன வழி?

இறை நம்பிக்கை வேண்டும் – யக்ஞங்கள் எல்லா இடங்களிலும் நடத்தவேண்டும் இதுதான் வன்முறைதீர ஒரே வழி – மனிதமுயற்சியால் இவைகளை ஒழிக்க முடியாது கடவுளின் அருள்தான் வேண்டும்.

About The Author