நகைச்சுவை துணுக்ஸ் (14)

போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.

——–

பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.

——–

எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!

——–

தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!

——–

வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

——–

About The Author

7 Comments

  1. ஜான் செல்வா

    நிலாச்சாரலில் இன்று தான் நனைகிறேன். இணய தளங்களுக்குள் இப்படியோர் இனிய தளமா ? கோழி முட்டைகளுக்குள்
    கோமேதக் கல் போல இத்தளத்தை ரசிக்கிறேன். யார் இந்த மாயன் ? எல்லா ஜோக்குமே இந்த எருமையைச் சிரிக்க வைத்த வகையில் அருமை. ஆனந்த விகடன் போன்ற பிரபல வாராந்தரிகளில் மட்டுமே இது போன்ற நல்ல காமெடி வரும். நான் இந்த நிலாச்சாரலின் உறுப்பினன் ஆக முடியுமா, ?

    ஜான்

  2. sathish

    தலைவரே பொரிச்சு எடுத்திட்டிங்க, சூப்பர்

Comments are closed.