நகைச்சுவை துணுக்ஸ் (9)

"டாக்டர், நீங்க சொந்தமா வீடு கட்டிக்கிட்டு இருந்திங்களே, முடிஞ்சதா?"

"இன்னும் இல்லை, அதை ஏன் நீங்க கேட்கிறீங்க?"

"எப்ப நான் டிஸ்சார்ஜ் ஆவேன்னு தெரிஞ்சுக்கத்தான்!"

****

"ஹலோ.. இன்ஸ்பெக்டர் சார்! 10ம் நம்பர் வீட்ல விபசாரம் நடக்குது. உடனே வாங்க சார்!"

"ச்சீ.. நான் அந்த மாதிரி ஆளு இல்ல! போன வைடா ராஸ்கல்!"

****

போலிஸ்: ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற?

திருடன்: சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க.
நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான் நிம்மதியாயிருக்கு!

****

போலிஸ்: உங்களை கைது செய்யப் போகிறோம்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு.

அரசியல்வாதி: எதுக்கு ஆஸ்பத்திரிக்கு?

போலிஸ்: எப்படி இருந்தாலும் ஸ்டேஷனுக்கு உள்ளே போனவுடன் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குதானே போகப் போறீங்க.

****

"அந்த பைனான்ஸ் கம்பெனிய சுத்தி ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்கோம்.. பார்த்திங்களா?"

"ஆமா, எதுக்கு?"

"ஓடும்போது சுலபமாய் பிடிப்பதற்குத்தான்!"

****

About The Author

3 Comments

  1. kalayarassy

    முதல் ஜோக் சிரிக்க வைக்கிறது. மற்றவை ஓ.கே.

  2. jeykrishna

    மாயன் அவர்கள் ரொம்போ காப்பி குடிப்பாறோ……………..

Comments are closed.