நண்பனுக்கு.. (3)

5.
நில் நண்ப! நில்!
எந்திரத்தின் மேலேறி
அதன்போக்கில் போகாதே
எந்திரம்தான்
உன் வழியில் போகணும்!
இன்னும் புரியாவிடில்
மாடசாமியின்
பொன்மொழியைப் படி:
"எந்திரம்
உன்னை ஓட்டுவதை
உணரும் கணத்தில்தான்
எந்திரத்தை
நீ ஓட்ட ஆரம்பிக்கிறாய்!"

6.
உன்னை நான்
எவ்விதம் கூறமுடியும்
மனப்பிறழ்வுகொண்டவன் என
நானும் அவ்விதமாக
இருப்பதை அறிந்தபின்?
அவ்விதம்
அறிந்துகொண்டதுவேண்டுமானால்
உன்னையும் என்னையும்
வேறுபடுத்தக்கூடும்
அவ்வளவுதான்!

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

 “

About The Author