நிலவும் நதியும்

ஆதவன் நடந்த பாதையின்
அனல் குறையவில்லை
நதியில் விழுந்து கிடக்கிறது
நிலா!

தன்னில் விழுந்த
வெள்ளித் துண்டு நிலவை
ஆயிரம் ஆயிரமாய்ச்
செதுக்கிப் பார்க்கிறது
நதி!

***************************

தூண்டிலில் சிக்காமல்
வழுக்கிக் கொண்டோடும்
நிலவை வெறித்துக்
கிடக்கின்றன
கரையில் துடிக்கும்
மீன்களின் கண்கள்!
**********************

சூரியக் குஞ்சுகளின்
கண்ணில் படாமல்
மரங்களின் உச்சியில்
மறைந்து கிடக்கும்
இருளைக் கொத்தித்
தின்கின்றன
பறவைகள்!

About The Author