பாகற்காய் பகோடா

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – ¼ கிலோ,
பூண்டு – 2 பற்கள்,
இஞ்சி – சிறிய துண்டு,
கடலை மாவு – ½ கோப்பை,
அரிசி மாவு – ¼ கோப்பை,
பெருங்காயம் – ¼ மேஜைக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் – ¼ மேஜைக்கரண்டி,
மிளகாய்த் தூள் – ½ மேஜைக்கரண்டி,
வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி (விருப்பத்திற்கேற்ப),
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்ட வடிவத்தில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியையும், பூண்டையும் தோல் உரித்து, கேரட் துருவியினால் துருவிப் பாகற்காயுடன் சேருங்கள். பாகற்காயுடன் (எண்ணெய் தவிர) மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். பிறகு, எண்ணெயைக் காய வைத்துப் பாகற்காயை அதில் போட்டுப் பொன் நிறமாகப் பொரித்தெடுங்கள்! சுவையான பாகற்காய் பகோடா ரெடி!

About The Author