பாதாம் கீர்

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு – 20,
முந்திரி – 5,
பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 100 கிராம்,
ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை:

பாதாம் பருப்பைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, தோலை நீக்கி விட்டு மின் அம்மியில் (மிக்ஸி) போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாலுடன் இந்த விழுதைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடுங்கள்!
பால் அரை பங்காகச் சுண்டியதும் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி ஆற விட வேண்டும்.
பின்னர், குளிர்பதனியில் (Fridge) சிறிது நேரம் வைத்திருந்து சுவைத்துப் பாருங்கள்!
சுவை உங்கள் நெஞ்சை அள்ளும்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author

1 Comment

  1. Rajan

    You have included 5 Cashew nuts in the list but not indicated how or when to add it on the procedure

    Best Eat it just like that !

Comments are closed.