புரிந்ததும் புரியாததும்(2)

அப்பாடா – என்
முதல் காதலியை – அவள்தான்
என் காதலி என்பது
அவளுக்குத் தெரியாதே.

அழைத்துத்
தேரேற்றிவர அனுப்பிவைத்தேன் ஒரு
கபடறியா வசந்தத்தை
வெறுங்கையோடு.
திரும்பி வந்தது.

ஏன் என்று கேட்டதற்குப்
பொக்கை வாயைச் திறந்து
குளறியது.

சொன்னது புரியவில்லை
சொல்லாமல் விட்டது
புரிந்தது.

About The Author