பெசரட் தோசை

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு – 2 கோப்பை
பச்சரிசி – ½ கோப்பை
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 6
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
வெங்காயம் – 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு
உப்பு           –  தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாசிப்பயறு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாகக் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பாசிப்பயறு, பச்சரிசி, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைத் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, வாணலியில் போட்டு லேசாக வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையுடன், அரைத்து வைத்துள்ள மாவில் சேருங்கள்.

தோசைக்கல்லில் சிறிது எண்ணெயைத் தடவி, மாவைத் தோசைகளாக வார்த்து, சிறிது எண்ணெயைச் சுற்றி ஊற்றி, இரு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுத்தால், சுவையான பெசரட் தோசை தயார்! சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறுங்கள்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author