பேரீச்சம்பழ அல்வா

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 200 கிராம்,
புதுப் பேரீச்சம்பழம் – 200 கிராம்,
நெய் – 200 கிராம்,
சர்க்கரை – சுவைக்கேற்ப,
தண்ணீர் – 100 மில்லி,
பால் – 1 மேசைக்கரண்டி,
குங்குமப்பூ – சிறிது,
ஏலப்பொடி – சிறிது.

செய்முறை:

வாணலியைச் சுட வைத்துக் கோதுமை மாவைப் போட்டு மட்டான தழலில், உருண்டை கட்டாமல், நன்றாக மணம் வரும் வரை கிளறுங்கள். நெய் முழுவதும் ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். பின் பேரீச்சம்பழங்களைப் பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். அல்வா பதம் வந்து நெய் பிரிய வேண்டும். இறுதியில் பாலில் நனைத்த குங்குமப்பூவையும், ஏலப்பொடியையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறினால் சுவையும் இரும்புச் சத்தும் நிறைந்த பேரீச்சம்பழ அல்வா தயார்!

About The Author