மண் வாசனை

மண் வாசனை என்றதும் நீண்ட நாட்களுக்கு முன் கேட்டு மனதில் பதிந்த மகாபாரதக் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடப்பது உறுதியாகி விட்டது. போர் ஆயத்தங்களை இரு தரப்பினரும் தொடங்கி விட்டனர். போருக்கு அடிப்படையான போர்க்களத்தைத் தேர்வு செய்யக் கண்ணனும் தர்மரும் ஊர் ஊராகச் சென்று பார்க்கிறார்கள்.

ஒரு கிராமத்துப் பக்கம் வரும்போது, தனது ஐந்து வயது மகன் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்க, கையில் மண் வெட்டியுடன் வயலுக்கு மண்ணை வெட்டி நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயி ஒருவனைப் பார்க்கிறார்கள்.

"தர்மா, இவனைப் பார்" என்கிறான் கண்ணன். காரியமே கண்ணாக மண்ணைப் போட்டு அடைத்து பாத்தி ஏற்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு காரியத்தை முடிக்கச் சிறிது மண்ணோ ஒரு கல்லோ தேவைப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பின் சிறிதும் யோசிக்கவில்லை. கையிலிருந்த மண் வெட்டியால் மகனின் தலையை வெட்டி, அத்தலையால் பாத்தியிலுள்ள ஓட்டையை அடைத்து விட்டான்."

"தர்மா, இதுவே.. இம்மண்ணே மிகச் சிறந்த போர்க்களம்" என்றான் பரமாத்மா. தர்மனின் குழப்பத்தைக் கண்ட கண்ணன் மேலும் கூறுகிறான். "தர்மா, எந்த மண் மனிதனிடத்தில் கடமையைத் தவிர வேறு குறிக்கோளையோ உணர்ச்சிகளையோ தூண்டவில்லையோ அந்த மண்ணே சுற்ற பற்ற உறவு பார்க்காமல், அக்கடமையில் வெற்றி ஒன்றையே நோக்காகக் கொண்டு போராடத் தூண்டும்"

******

மண்ணின் மணம் மனிதனை மாற்றுவதற்கு இன்னும் பல உதாரணங்களைக் காட்டலாம்.

அழிவற்ற அருள் நிலையடைந்த ஞானியரின் உடலைப் புதைக்கச் சொல்கிறார் திருமூலர்.

"எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணலதம் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில மழை விழா: வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே… (மந்திரம் 1911) என்கிறார்.

காரணம், மண்ணோடு கலந்த ஞானியர் அம்மண்ணில் வாழும் மாந்தர்க்குத் தம் சக்தியையும், தம் குணநலன்களையும் அருளிச் செய்வார்கள் என்பது உண்மையாக உணரப்படும் ஒன்று.

மகான்கள் சமாதியடைந்த இடங்களில் நலம் வேண்டி மக்கள் வழிபடுவது நடைமுறை உண்மை. அம்மாதிரியான தலங்கள் நிஜானந்த போதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணங்களாகச் சில வருமாறு.

1. அகத்தியர் (அனந்தசயனம்)
2. அகப்பேய்ச் சித்தர் (திருவையாறு)
3. அழுகண்ணர் (நாகப்பட்டினம்)
4. இடைக்காடர் (திருவிடை மருதூர்)
5. இராமதேவர் (அழகர்மலை)
6. கடுவெளி சித்தர் (காஞ்சிபுரம்)
7. கமலமுனி (மதுரை)
8. கருவூரார் (திருக்காளத்தி)
9. காசிபர் (ருத்திரகிரி)
10. காலங்கி (காஞ்சிபுரம்)
11. கும்பமுனி (கும்பகோணம்)
12.கொங்கணர் (திருப்பதி, கோடியக்கரை)
13. கோரக்கர் (திருகோணமலை)
14. கௌதமர் (திருவருணை)
15. சட்டைமுனி (சீர்காழி, ஸ்ரீரங்கம்)
16. சுந்தரர் (திருவாரூர்)
17. தன்வந்திரி (வைத்தீஸ்வரன் கோயில்)
18. திருமூலர் (சிதம்பரம்)
19.நாரதர் (திருவிடைமருதூர்)
20. பதஞ்சலி (இராமேஸ்வரம்)
21. பாம்பாட்டி (திருஞாலம், துவாரகை)
22. புண்ணாக்கீசர் (நாங்குனேரி)
23. புலத்தியர் (பாபநாசம், ஆவுடையார்கோயில்)
24. போகர் (பழனி,கதிர்காமம்)
25. மச்சமுனி (திருப்பரங்குன்றம்)
26. மார்க்கண்டேயர் (திருஆனைக்கா, நல்லூர்)
27.வசிட்டர் (வைத்தீஸ்வரன் கோயில்)
28.வான்மீகர் (எட்டுக்குடி)
29. விசுவாமித்திரர் (காசி)

ஞானியரது திருவுடல் ஓம்புவாரின்றி மண்ணில் கிடந்துட (புதைக்கப்படாமல்) அழிந்தால் நாட்டின் அழகெல்லாம் பாழ்படும். நாடு வீழ்ச்சியடையும். தணியாத வெப்பும், தீயும், பிறவும் மண்ணுலகம் முழுதும் பரவும் என்கிறார் திருமூலர்.

"அந்தமில்ஞானி அருளை அடைந்தக்கால்
அந்தஉடல்தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே."……. என்கிறது மந்திரம் (1875)

கண் முன் விரியும் மண்ணின் மகிமைகள்

1. வாழைத் தோட்டத்து அய்யன் கோயில், அய்யம்பாளையம், சாமளாபுரம் அஞ்சல், மங்கலம் வீதி, பல்லடம் வட்டம், கோவை மாவட்டம்- 641 663. திருப்பூரிலிருந்து 20 கிமீ. பல்லடத்திலிருந்து 15 கிமீ .

சக்தி வாய்ந்த பூமி. இங்குள்ள புற்று மண்ணைப் பூசினால் யானைக்கால் வியாதி, கண் நோய் மற்றும் அனைத்து தீராத விஷக் கடிகளும் முறிபடும் என்பது லட்சக்கணக்கானோர் தம் அனுபவத்தில் கண்ட உண்மை.

2. பூமியில் இருப்பதாக விஞ்ஞானிகளால் ஊகிக்கப்படும் 4,00,000 நுண்ணுயிரிகளில், 2007 ஆம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, வெறும் 4,000 நுண்ணுயிரிகளையே கண்டுபிடித்திருக்கிறார்கள்.

3. சென்னை-திண்டிவனம் சாலையில், சென்னைக்கு 80 கிமீ தொலைவில் உள்ளது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள விஷ ஹர தீர்த்த நீர் எவ்வித சரும நோயையும் தீர்க்க வல்லது.

சரும நோய் தீர்க்க வல்ல இதர தல தீர்த்தங்கள் பின்வருமாறு :

மயிலாடுதுறைக்கு 2 கிமீ தொலைவிலுள்ள நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில் சூரிய தீர்த்தம்.

கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மணக்கால் அய்யம்பேட்டை அருகில் உள்ள சிமிலி
எனப்படும் தலையாலங்காடு கோயில் சங்கு தீர்த்தம்.

(முக வடுக்கள் நீக்கும்) திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகில் உள்ள உசாத்தானம் எனப்படும் கோவிலூரிலுள்ள மந்திரபுரீஸ்வரர் ஆலய மார்க்கண்டேய தீர்த்தம்.

சேலம் அருகிலுள்ள (கஞ்சமலை சித்தர் வாழ்ந்த) கஞ்ச மலை காந்த தீர்த்தம்.

4. மண்ணின் மகிமையை உணர்ந்த கொங்கு வேளாளர்கள், 400 வருடங்களுக்கு முன்னர் தங்கள் குல தெய்வமான காங்கேயம் கீரனூர் அம்மன் கோயிலில் இருந்து மண்ணைக் கொண்டு வந்து கோவையிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் வெள்ளக்கிணறு பத்திரகாளி அம்மன் கோயிலைக் கட்டினார்கள்.

About The Author

3 Comments

 1. alax

  மகனின் தலையை வெட்டி அடைத்தான். இது ஆரோக்கியமன விலக்கமாக தெரிய வில்லை
  அரை குரையக படிட்து விட்டு விலக்கம் கொடுக்க கூடாது

 2. ஷக்தி

  திரு.அலெக்ஸ் அவர்களின் விமர்சனம் கண்டேன்.நான் குறிப்பிட்டுள்ள சிறு கதை மொத்த மஹாபாரதத்தின் சாராம்சமாகும்.
  என்னுடைய தனிப்பட்ட விளக்கமல்ல.நன்

 3. A.Malaichamy

  கடமையின் பெருமையை உனர்த்த இப்படிப்பட்ட உதாரனம்தான் தேவையா? ஒரு உழவன் நிலத்தை உழுது இந்த உலகில் யாரும் பட்டினியோடு இருக்க விடாமல் செய்வதுதான் உழவனின் கடமையாகக் கருத வேன்டும். இப்படிப்பட்ட உதாரனம் சொன்ன கன்னன் பரமாத்மாவாகவே இருந்தாலும் அவன் உழவனை விட கீழானவனே.

Comments are closed.