மாயையின் நிழலில்…

மாயையின் நிழலில்..

ஒவ்வொருவோர்
வாழ்வின் இறுதியிலும்
இன்னொரு வாழ்வின்
முதல்
துளிர்த்துவிடுகிறது!
துளிர்த்ததை
அறிவதற்குள்
அது முடிந்து
இன்னொரு வாழ்வினைத்
தொடங்கி வைத்துவிடுகிறது!

எனவே
யாரின்
வாழ்வை
யார் வாழ்கிறோம்
என்பதையுணராமலே
கழிந்துபோகின்றன யாவும்!
இது எனதானது என்னும்
மாயையின் நிழலில்…

*****

உறவுகள்..

சாலையின்
குறுக்கே
அடிபட்டுக்
கிடக்கிறான்.
அவனுடனான
உறவை
உயிர்ப்பிக்கிறார்கள்
அத்தனை உறவுகளும்
அவன் வேண்டியபோது
இல்லாமல்…

*****

About The Author