முட்டைக்கோஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் – 100 கிராம்
கடலை மாவு – 1/4 கி
பெரிய வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு- 3 பல்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

முட்டைக்கோஸை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கவும். மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். இப்பொழுது கடலை மாவில் கோஸ், வெங்காயத் துண்டுகள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

About The Author

1 Comment

  1. jeyachitra

    வெர்ய் எஅச்ய் அன்ட் டச்ட்ய் ச்னcக் fஒர் டிffஇன்.

Comments are closed.