முப்பருப்பு அடை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 2¼ கோப்பை,
பச்சரிசி – ¼ கோப்பை,
துவரம் பருப்பு – ¾ கோப்பை,
கடலைப் பருப்பு – ¼ கோப்பை,
பாசிப் பருப்பு – ஒரு கைப்பிடி,
மிளகாய் வற்றல் – 10,
இஞ்சி – சிறிய துண்டு,
பெரிய வெங்காயம் – 2,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனியாகவும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து அரிசியைக் கழுவி, மிளகாய் வற்றல், உப்பு, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பருப்புகளையும் கரகரப்பாக அரைத்து, அரிந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு, வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.அதை மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு கரண்டியால் விடும் அளவிற்கு இருக்க வேண்டும்.

இப்பொழுது, தோசைக் கல்லை வைத்து, மாவைச் சற்றுக் கனமாக ஊற்றி, சுற்றி எண்ணெயை விட வேண்டும். சிவந்ததும் அடையைத் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.

பிறகு, சாப்பிட்டுப் பாருங்கள்! புதினா சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author