மொச்சை விதைக் கறியும், ரசமும்

தேவையான பொருட்கள் :

அதிகம் முதிராத இளைய மொச்சைக் கொட்டை – 2 கப்
பச்சை மிளகாய் – எட்டு
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் – ஒரு மூடி
பூண்டு – ஒரு முழுக் கிழங்கு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சம்பழம் – 1
பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள் – ஒரு கப்

செய்முறை :

மொச்சை விதையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாய், உரித்த பூண்டுக் கிழங்குடன், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு, இடித்த மசாலாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போய் நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.

வெந்த மொச்சை விதையின் நீரை ஒரு பாத்திரத்தில் கொட்டி விடவும். வதக்கிய மசாலாவில் பாதியை நீருடன் சேர்த்து, தேவையானால் சிறிது நீரும், உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இறக்கி வைத்து எலுமிச்சை ரசம் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டால் ரசம் தயார்.

ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகை தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வதக்கிய பிறகு, வேக வைத்த மொச்சை விதையைப் போட்டு நன்றாகக் கிளறி, மீதி மசாலாவயும் சேர்த்து, தேவையானால் உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான சுண்டல் தயார்.

About The Author