லக… லக… ஜோக்ஸ் (105)

மருத்துவர்: என்ன, தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு?!

நோயாளி: இனிமே அடிக்கவே மாட்டேன்னு சொல்லி என் மனைவி என் தலையிலே அடிச்சு சத்தியம் பண்ணினா டாக்டர்.

==========

மனைவி: என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போக ஒரே ஒரு டிக்கெட் வாங்கியிருக்கீங்க?!

கணவன்: அடடே! சந்தோஷத்துலே என்னையே மறந்துட்டேன்!

=========

வாடிக்கையாளர்: நாங்க கொடுத்த பணத்தை ரெண்டே மணி நேரத்துல ரெண்டு மடங்கா திருப்பித் தருவோம்னு சொன்னீங்க. ஆனா நான் குடுத்ததைத்தான் திரும்பக் குடுத்திருக்கீங்க.

நிதி நிறுவன அலுவலர்: நல்லாப் பாருங்க! நீங்க பத்து 100 ரூபா குடுத்தீங்க. நாங்க இருபது 50 ரூபா தந்திருக்கோம்!

=========

இசை ஆசிரியர்: எங்கே சா… பாடு!

மாணவி: எங்கம்மா மாச சம்பளம் மட்டும்தான் சார் பேசியிருக்காங்க. சாப்பாடு எல்லாம் போட மாட்டாங்க.

=========

நண்பன்-1: என்னடா, சிரிச்சுக்கிட்டே வர்றே?

நண்பன்-2: யாரும் பார்க்கிறதுக்குள்ளே ஸ்டாம்ப் ஒட்டாத கடிதத்தை நைசா போஸ்ட் பண்ணிட்டு வந்துட்டேன்.

==========

About The Author