லக… லக… ஜோக்ஸ் (17)

நண்பன் – 1 : பயம்கிற வார்த்தையே என் அகராதியில கிடையாது.

நண்பன் – 2 : அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கடையில அகராதிய வாங்கும்போதே எல்லா வார்த்தையும் இருக்கான்னு சரியாப் பார்த்திருக்கணும்.

**********

நண்பன் – 1 : கண் டெஸ்ட் பண்ண டாக்டர்கிட்ட போயிருந்தியே, என்னாச்சு?

நண்பன் – 2 : போடா! எனக்காவது கண்ல பிரச்சனைதான். ஆனா அந்த டாக்டருக்கு கண்ணே தெரியாது போலிருக்கு.

நண்பன் – 1 : எப்படி சொல்றே?

நண்பன் – 2 : பின்ன, கண்ணையே டார்ச் அடிச்சு பார்க்கறாரே!

**********

வாடிக்கையாளர் : இந்தக் கண்ணாடிக்கு கியாரண்டி உண்டா?

கடைக்காரன் : ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி!

நபர் : சூப்பர்! நான் வாங்கிக்கிறேன்.

*********

நபர் – 1 : அறிவிச்சதைக் கேட்டீங்களா? இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரயில் வந்திடுமாம். தண்டவாளத்துல நிக்காதீங்க, மேலே ஏறி வாங்க!

நபர் -2 : நீங்கதான் அதை சரியா கேக்கல. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த ப்ளாட்ஃபார்முக்கு ரயில் வந்திடும்னுதான் சொன்னாங்க. அதனால நீங்க வந்திடுங்க கீழ!

***********

ஆசிரியர் : கிருஷ்ணர், ஜீஸஸ், காந்தி இவங்க மூணு பேருக்கும் இருக்குற ஒத்துமை என்ன தெரியுமா?

பப்பு : இவங்க எல்லோருமே லீவு நாள்லே பிறந்தவங்க டீச்சர்!

About The Author