லக… லக… ஜோக்ஸ் (23)

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்.

மாணவர்கள்: நீங்க சொன்னது எங்களுக்குப் புரியலை சார்!

************

நீதிபதி: நீ செய்த தப்புக்கு, பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை. இதுல எது வேணும் உனக்கு?

குற்றவாளி: ஹி… ஹி… பத்தாயிரமே போதும் சாமி! பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

************

தொண்டன் – 1: ஆஸ்பத்திரி திறப்பு விழாவுக்குப் போன நம்ம தலைவர் ஏன் டென்ஷனாயிட்டாரு?

தொண்டன் – 2: பன்றிக்காய்ச்சல் வார்டுக்கு அவர் பேரை வச்சிருக்காங்களாம்!

***********

மனைவி: ஏங்க நீங்க இப்பெல்லாம் என்னைய தூக்குறதே இல்லை?

கணவன்: நான் உன்னைய தூக்குனா, என்னைய தூக்கிட்டு போக நாலு பேரு வந்துருவாங்களே!

************

கடத்தல்காரன்: ஹலோ! உன் பொண்டாட்டியை நாங்கதான் கடத்தி வெச்சிருக்கோம். பத்து லட்ச ரூபாய் கொடுத்தாதான் விடுவோம்!

கணவன்: என்னது பத்து லட்சமா? அவ இம்சை தாங்க முடியாம ‘சனியன் தொலையட்டும்’னு கொஞ்ச நேரத்துல நீங்களே விடப் போறீங்க பாருங்க!

About The Author

1 Comment

Comments are closed.