லக… லக… ஜோக்ஸ் (4)

நோயாளி : எங்கே பார்த்தாலும் நிறைய புள்ளிங்களா தெரியுது டாக்டர்!
மருத்துவர் : நான் குடுத்த மூக்குக்கண்ணாடி போட்டுப் பார்த்தீங்களா?
நோயாளி : பார்த்தேன் டாக்டர்! அதுவரை மங்கலா தெரிஞ்ச புள்ளிங்க இப்போ நல்லா தெளிவாத் தெரியுது.

*******

ஆசிரியர் : நிலத்திலியும், தண்ணீலியும் வாழற ஒரு உயிரினத்தோட பேர் சொல்லு பார்ப்போம்!
மாணவன் : தவளை டீச்சர்!
ஆசிரியர் : அதே மாதிரி இன்னும், நாலு உயிரினத்தோட பேர் சொல்லு பார்ப்போம்!
மாணவன் : தவளையோட அப்பா, தவளையோட அப்பா, தவளையோட அண்ணா, தவளையோட அக்கா.

*******

காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!

*******

About The Author