லக.. லக… ஜோக்ஸ் (40)

காதலி: நான் காதலிக்கறது எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்! கையில சூடு போட்டுடுவார்.

காதலன்: அடச்சே! இப்படியெல்லாமா பண்ணுவாங்க!?

காதலி: ஆமா! இங்கே பாருங்க, கையில ஏற்கனவே அஞ்சாறு சூடு போட்டு இருக்காரு.

******

நண்பர் – 1: படிச்சுக்கிட்டிருக்கிற பையனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே! உங்களுக்கு என்ன பைத்தியமா?

நண்பர் – 2: அட நீங்க வேற, இவன் பரிட்சைக்கு போகாம இப்ப வந்து படிச்சிக்கிட்டிருக்காங்க!

******

மகேஷ்: வாழ்க்கையில ரெண்டு விஷயத்துக்கு பயந்தே ஆகணும்!

சுரேஷ்: அதென்ன ரெண்டு விஷயம்?

மகேஷ்: ஒண்ணு எமன், ரெண்டாவது உமன்!

******

கான்ஸ்டபிள் – 1: கலவரத்தை அடக்க வந்த இன்ஸ்பெக்டர் போதையில இருந்தார்னு எப்படிக் கண்டுபிடிச்சே?

கான்ஸ்டபிள் – 2: ஸ்பாட்ல சார்ஜ்னு கத்தறதுக்கு பதிலா லார்ஜ்னு கத்திட்டாரு!

******

நபர் – 1: சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்?

நபர் – 2: ஒம்பது மணிக்கு.

நபர் – 1: அதுக்கு முன்னாடி எதாவது இருக்கா?

நபர் – 2: ஓ இருக்கே… ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.

******

About The Author