லக… லக… ஜோக்ஸ் (41)

நண்பன் – 1: உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க… அவ்ளோ ஆசை இருக்கிறவன், ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?

நண்பன் -2: வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்… வீட்டுக்குப் போற எண்ணமே வராது. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன். அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்.

*****

ரசிகர்: நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்?

நடிகை: சம்பளப் பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!

*****

நண்பர் – 1: போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே… மறந்துட்டியா?

நண்பர் – 2: சேச்சே… வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு, அதுக்குள்ள மறப்பேனா?

*****

பூசாரி: எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க?

நாய்க்காரர்: நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க!

*****

டாக்டர்: என்ன, அந்தப் பேஷண்ட்கிட்ட திருடின கிட்னில பிராப்ளமா? என்ன ப்ராப்ளம்?

நர்ஸ்: அவர் கிட்னில ‘இந்தக் கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ன்னு எழுதியிருக்கு டாக்டர்!

*****

About The Author