லக… லக… ஜோக்ஸ் (5)

நண்பன் – 1 : ஏண்டா பேங்க் வாசல் வரைக்கும் போயிட்டு உள்ளே போகாம வந்துட்டே?

நண்பன் – 2 : இல்லடா, இன்னிக்குக் காலங்கார்த்தாலே, என்னை ஒரு பொண்ணு செருப்பாலே அடிக்கிற மாதிரி கனவு கண்டேன். அங்கே பேங்க் வாசல்ல என்னடான்னா, ‘உங்கள் கனவுகளை நாங்கள் நனவாக்குவோம்’னு வாசலிலேயே எழுதிப் போட்டிருக்கான். அப்புறம் எப்படிடா உள்ள போறது?

*******

வசூல்ராஜா : டேய் வட்டி! எனக்கு உடம்பு சரியில்லை. நம்ம தெருவுல இருக்குற டாக்டரை கூட்டிட்டு வா!

வட்டி : அண்ணே! நீங்களே ஒரு டாக்டர்தானே? ஏன் அவரைப் போய் கூப்பிடச் சொல்றீங்க?

வசூல்ராஜா : நானே பார்த்துக்கலாம்தான். ஆனா, என்னுடைய் ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்தி பாரு, அதனால்தான்.

*******

கணவன் : எப்படி டார்லிங்! எந்த மேக்கப்பும் இல்லாம இவ்வளவு அழகா இருக்கே?!

மனைவி : உங்களுக்கு என்ன வேணும்னு நேரடியாவே சொல்லித் தொலைங்க!

*******

பையன் : நான் உன்னைக் காதலிக்கிறேன்.

பெண் : சாரி! நான் வேற ஒருத்தரைக் காதலிக்கிறேன்.

பையன் : இரு, இரு! உங்க அம்மாகிட்டே சொல்றேன்.

பெண் : அய்யய்யோ! இருடா, நானும் உன்னையே காதலிச்சுடறேன்.

*******

நண்பர் – 1 : என் வீட்டில் வளக்குற கிளிக்காக இந்த விதைகளை வாங்கினேன். அநாவசியமா செலவு செஞ்சு ஏமாந்ததுதான் மிச்சம்.

நண்பர் – 2 : ஏன், என்னாச்சு?

நண்பர் – 1 : இந்த விதைகளைப் போட்டா கிளி நல்லா வளரும்னு சொன்னாங்க. நானும் விதைகளை தோட்டத்தில போட்டு ஒரு மாசம் ஆச்சு. கிளியோட வளர்ச்சியில எந்த மாற்றமும் இல்லை.

*******

About The Author