லக… லக… ஜோக்ஸ் (55)

தோழி – 1: பத்திரிக்கை ஆசிரியருக்குக் காதல் கடிதம் அனுப்பினது தப்பாப் போச்சு.

தோழி – 2: ஏன், என்னாச்சு?

தோழி – 1: அதையும் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணி சன்மானம் அனுப்பிட்டாரு.

                                                                      *****

தோழி – 1: என்ன, உன் வீட்டுக்காரர் தூக்கத்துல ‘ஹலோ… ஹலோ…’ன்னு போன்ல பேசற மாதிரி பேசறாரா?

தோழி – 2: ம்! கேட்டா தூக்கத்துல ‘கால்’ போடற பழக்கமாம்.

                                                                     *****

தோழி – 1: என்னடி, நீ வீட்டுக்குள்ள இருக்குறே, உன் மாமியார் என்னடான்னா வாசல்ல நின்னுக்கிட்டு சண்டை போடுறாங்க?

தோழி – 2: அங்க நின்னு சண்டை போட்டாதான் அவங்க ஜெயிக்க முடியும்னு ஜோசியர் சொல்லியிருக்காராம்.

                                                                     *****

தோழி – 1: என் புகுந்த வீட்டுல பொம்பளைங்களை கொஞ்சம்கூட மதிக்க மாட்டேங்குறாங்க.

தோழி – 2: ஏன், அப்படி என்ன செய்யறாங்க?

தோழி – 1: மாமியாரையும் மருமகளையும் சண்டையே போட விடாம, எந்த நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க.

                                                                     *****

தோழி – 1: என் புருஷனுக்கு ரொம்ப நல்ல மனசு.

தோழி – 2: எதை வெச்சு சொல்ற?

தோழி – 1: சமையல் செய்றதோடில்லாம அவரே எனக்கு ஊட்டியும் விடறாரே.

                                                                     *****

About The Author