லக… லக… ஜோக்ஸ் (80)

தொண்டன்-1: தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?

தொண்டன்-2: பின்னே… அவர் தி.நகர்லயும், மெரினா பீச்சுலேயும், கோயம்பேடு மார்க்கெட்லேயும் மட்டுமே பேசினா கூட்டம் இல்லாம எப்படி இருக்கும்?…

=========

போலீஸ்: குடிச்சிட்டு ஏன்யா வண்டி ஓட்டறே?

குடிகாரன்: குடிக்கலைன்னாதான் சார் என் கை நடுங்கும், ஆக்ஸிடென்டு ஆயிடும்!

=========

அப்பா: படிக்கற வயசுலே உனக்கு எதுக்குடா செல்போன்?

மகன்: சரி, அப்ப நான் படிக்கலை! செல்போன் வாங்கிக் கொடுங்க!

=========

நபர்-1: அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

நபர்-2: பேஷண்ட் நெஞ்சை விரலால தட்டிப் பார்த்து, இருதயத்தில் ஓட்டைங்கிறாரே?

=========

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, குரங்கு ஒன்று உள்ளே வந்துவிட்டது.

ஆசிரியர்: யாருடா இது, நியூ அட்மிஷனா?

மாணவர்கள்: இல்ல சார், நியூ அப்பாய்ன்மெண்ட்டுன்னு தோணுது.

==========

About The Author