வாரம் ஒரு பக்கம்(8)-சோயென் சாக்கு

சோயென் சாக்கு என்ற ஜென்குரு அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களாக வகுத்துக்கொண்ட நெறிமுறைகள் இன்றும் நமக்குப் பயனளிக்கக்கூடியவை.

1.காலையில் உடை உடுத்துவதற்கு முன் ஊதுவத்தியை ஏற்றித் தியானம் செய்தல்.

2.இரவில், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லுதல்.

3.குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்பு உணவு உட்கொள்ளுதல். வயிறு திருப்தி தரும் முன்பே உண்பதை நிறுத்திக் கொள்ளுதல்.

4.தனியாக, ஓய்வாக இருக்கும்போது நமக்கு உள்ள மனநிலையிலேயே விருந்தாளிகளையும் வரவேற்றல்.

5.கூறுவதை நன்றாகக் கவனித்துக் கூறுதல்; கூறியபடி நடத்தல்.

6.வாய்ப்புகளை நழுவ விடாமல் இருத்தல். காரியத்தில் இறங்கும் முன்பு நன்றாகச் சிந்தித்து இறங்குதல்.

7.இறந்த காலச் செய்கையை நினைத்து வருந்தாமல் வருங்காலத்தில் கவனம் செலுத்துதல்.

8.பயமற்ற வீரனைப் போலவும் பாசாங்கில்லாத குழந்தையைப் போலவும் இருத்தல்.

9.படுக்கைக்குச் செல்லும்போது இதுதான் என்னுடைய கடைசித் தூக்கம் என்று கருதி ஆழ்ந்த நித்திரைகொள்ளுதல்.

10.படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது அறுந்த பழைய செருப்பை விட்டுவிட்டு அகலுவது போல உடனே படுக்கையிலிருந்து எழுந்திருத்தல்.

சாக்கு கூறுபவற்றைக் கேட்கும்போது இவையென்ன கடினமா என்பதுபோலத் தோன்றும்.

ஊருக்கு உபதேசம்:

எந்தவிதச் சாக்கும் சொல்லாமல் இவற்றைக் கடைப்பிடிக்க முயலுவோமாக!

நன்றி: இறையன்பு அவர்களின் ‘ஏழாவது அறிவு’ நூல்!

About The Author