வார்த்தை வேட்டை (1)

நிலாச்சாரல் வாசகர்களுக்கென ஒரு புதுமையான விளையாட்டை கொண்டு வந்தால் எப்படியிருக்குமென்று யோசித்தபோது கிடைத்ததுதான் இந்த ‘வார்த்தை வேட்டை’ விளையாட்டு. இந்த விளையாட்டில் அப்படி என்ன இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்கதானே? இருங்க.. இருங்க.. அதை நானே சொல்லிடறேன்.

ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை நாங்க உங்களுக்கு கொடுப்போம். அந்தத் தலைப்போடு தொடர்புடைய பல வார்த்தைகளில் சில வார்த்தைகள் எழுத்துக்கள் குவியலில் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும். அந்த வார்த்தைகளை வேட்டையாடிக் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதுதான் இந்த ‘வார்த்தை வேட்டை’ விளையாட்டு.

என்ன.. விளையாட்டைப் பற்றி சொல்லும்போதே சுவாரசியமாக இருக்கு.. இல்லையா? விளையாடிப் பாருங்க! சுவாரசியமான இந்த ‘வார்த்தை வேட்டை’ கண்டிப்பாக உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்த வாரம் உங்களுக்காக நாங்க தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு ‘விலங்குகள்’. இங்கே 12 விலங்குகள் உங்களுடைய வேட்டைக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. ‘விலங்குகள்’ என்று சொன்ன உடனே ஆடு, மாடு, கோழின்னு எளிமையாயிருக்காதுப்பா. அதையும் தாண்டி கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும்! என்ன யோசித்து விலங்குகளை வேட்டையாடிடுவீங்கதானே? ஒளிந்திருக்கும் 12 விலங்குகளையும் வேட்டையாடுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

என்ன ஆரம்பிக்கலாமா? நீங்கள் கண்டுபிடிக்கும் விலங்குகளின் பெயர்களை கீழேயிருக்கும் பின்னூட்ட படிவத்தின் மூலமாக எங்களுக்கு அனுப்பவும்.

Word Hunt

About The Author

10 Comments

 1. Vijay T R

  1. முள்ளம்பன்றி
  2. வரிக்குதிரை
  3. கடல் ஆமை
  4. வெள்ளாடு
  5. கீரிப்பிள்ளை
  6. வௌவால்
  7. காண்டாமிருகம்
  8. நீர்யானை
  9. பரி
  10.உடும்பு
  11.சிறுத்தை
  12.காட்டுப்பன்றி

 2. Aninthe

  முள்ளம்பன்றி, வரிக்குதிரை, கடலாமை, காட்டுப்பன்றி, வெள்ளாடு, கீரிப்பிள்ளை, உடும்பு, வெளவால், நீர்யானை, சிறுத்தை புலி,காண்டாமிருகம், யானை

 3. Yashashvini

  விஜய், நேன்க பட்டியலிட்டதில் 11 விலங்குகள் பெயர் சரிதான். ஆனால் பரி எங்க பட்டியலில் கிடையாது. இன்னும் ஒரே ஒரு விலங்கு பெயர் தான். கண்டுபிடிங்க பார்க்கலாம். உங்களால் முடியும் விஜய்.

 4. Yashashvini

  அனி, 11 விலங்குகளை சரியா கண்டுபிடிச்சிட்டீங்க. நீர்யானைக்குள் யானை ஒளின்திருக்கும் அப்படீன்னு நீங்க யோசித்ததை நான் பாராடுறேன். ஆனால் 12வது தனியாக அமைதியா உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கு. இருக்கு. கண்டுபிடிங்க பார்க்கலாம்.

 5. dheepa

  mullampandri, varikuthurai, udumbu, vaval, neeryanai, kalai maan, siruthai, pulli, kanda mirugam, velladu, kadal aamai and kattup pandri

 6. Yashashvini

  கலக்கிட்டீங்க தீபா. 12 விலங்குகளின் பெயர்களையும் சரியா சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.

 7. Yashashvini

  வித்தியசமாக யொசிச்சிருக்கீங்க. ஆனால் விடை அது இல்லை. தீப சரியான விடையை சொல்லி பாராட்டுக்களை அள்ளிட்டாங்க.

 8. P Ramachandran

  முள்ளம்பன்றி, வரிக்குதிரை,கடல் ஆமை , காட்டுப்பன்றி, வெள்ளாடு, கீரிப்பிள்ளை, உடும்பு, வெளவால், நீர்யானை, சிறுத்தை புலி,காண்டாமிருகம், யானை

Comments are closed.