விரல் தொட்ட வானம் (3) – வண்ணத்துப்பூச்சி

நான்
பயணிக்கும் பாதைகளில்
தென்பட்டுவிடுகிறது
ஏதேனும் ஒரு வண்ணத்துப்பூச்சி.

அதன்
வண்ணங்களில் கிறங்கி
கைக்கொள்ள நினைக்கிற
அந்த நேரத்தில் சிடுசிடுக்கும்
உள்ளுக்குள் இருக்கும்
வண்ணத்துப்பூச்சி

"உம் முகரக் கட்டைக்கு
ஒண்ணு போதும்!"
போகிற போக்கில்
எல்லோருக்கும் ஆசையிருக்கிறது

விருப்பமான கோலத்தை
பார்ப்பதற்கும்
வரைவதற்கும்.

இப்படித்தான்
இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்
மாவைத் தேடுகிறார்கள்.

எப்படியேனும்
பார்க்க நினைப்பவர்கள்
விரலையும் திருடுகிறார்கள்.

பேதமின்றி
எல்லோருடைய கோலத்தையும்
அழிக்கிறது மழை
போகிற போக்கில்!

தொட்டுத் தொடரும்…

About The Author

1 Comment

Comments are closed.