இராசிபலன்கள் (06-01-2014 முதல் 12-01-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில், காரணமற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது! வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள்! இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரப் பொருள் வியாபாரிகள், இவை சார்ந்த துறைகளில் பணிபுரிவோர், கமிசன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர் ஆகியோர் நற்பலன்களை அடைவர். தந்தை – மகன் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு விலகும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் காலமாகும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். நரம்பு, எலும்பு போன்றவற்றில் சிற்சில பாதிப்புகள் வந்து போகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். வெகு காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த பூர்விகச் சொத்துக்கள் சட்டப்பூர்வமாகக் கைக்கு வந்து சேரும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுங்கள்! செய்யாத குற்றத்துக்காக அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்! பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவு அடைவீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்வீர்கள். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மீன் பிடித் தொழில் செய்பவர்கள் ஆகியோர் மிகுலாபம் அடையக்கூடிய காலமாகும். வராத பணம், பொருட்கள் ஆகியவை பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணத் தகவல் மையங்கள், நண்பர்கள் போன்றோர் உதவியால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. பழுதுபட்ட ஆலயங்கள், வீடு, வாகனங்கள் போன்றவற்றைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். வேற்று மதத்தவரால் சில ஆதாயங்கள் கிடைக்கும். அலுவலக ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்திற்குப் பணியிட மாற்றமும் ஏற்படலாம். பூர்விகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலம் பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் செய்வதற்கான முயற்சி தொடர்பாக வங்கிகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் கிடைக்கும். திருடு போன பொருட்கள், குறிப்பாக வாகனங்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக தொலைவான இன்பச் சுற்றுலாக்களை மேற்கொள்வீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக வீண் பொருட் செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள். உடற்சூடு, காய்ச்சல் போன்ற தொல்லைகள் வந்து போகலாம். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதன் மூலம் சில கவலைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் திருப்தி அடைவீர்கள். கட்டடம், நில புலன்கள், செங்கல், மணல், கல், சிமிண்ட் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக் கல்லூரி சார்ந்த மாணவர்கள், அழகுபொருள் வியாபாரிகள், திருமண மண்டபம் நடத்துபவர்கள், வாகன சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வரும் நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். மனைவியின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். பொதுத் தொண்டுகளில் கவனத்துடன் பணி ஆற்றுவது நல்லது! நாட்பட்ட நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள். வங்கி மூலம் புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்கள் சற்றுத் தாமதமாகவே நிறைவேறும். தீராத நோய்கள், கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தின்பண்ட வியாபாரிகள், சமையல் கல்லூரி நடத்துபவர்கள், இவற்றில் பணிபுரிபவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், முதியோர் இல்லம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். அண்டை அயலாரிடம் கவனமாகப் பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷங்களுக்காகப் புதிய முயற்சிகளில் தலையிட்டு வெற்றி பெறுவீர்கள்.

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். மிக நீண்ட காலமாக நினைத்துக் கொண்டு இருந்த புனிதப் பயணங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் – வாங்கல் தொழில் செய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்! அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. சகோதர, சகோதரிகளால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! வேலை விஷயமாகப் பணத்தையோ பொருளையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! அசைவப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருட்கள், பழைய பேப்பர் பழைய பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள், மத போதகர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். மகான்களின் தரிசனங்கள் மூலம் நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு, காளி போன்ற அம்மன் வழிபாடு ஆகியவற்றைச் செய்து வருக!

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பச் சொத்து விஷயங்களில் வழக்கு சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் உகந்ததாகும். சகோதர, சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்! கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிரிந்து போன கணவன் மனைவி மனக் கசப்பு நீங்கி மீண்டும் ஒன்று சேருவர். வழக்குகள், குறிப்பாக நிலம் சம்பந்தமான வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது! கண், காது, முகம் ஆகியவற்றில் சிற்சில தொல்லைகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும். குழந்தைகளுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் காரணமில்லாத மனக் கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். மின்சாரத்துறை சார்ந்தவர்கள், எரிபொருள் விற்பனையாளர்கள், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், காரமான உணவுப் பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கண் காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் பொருள் வரவுகள் உண்டாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த காரியங்களைத் துணிவுடன் சற்று முயற்சி செய்து முடிப்பீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றால் ஏமாற வேண்டாம்! வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! பழைய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்து சேரும். தோல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணெய், பெட்ரோல், டீசல் வியாபாரிகள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், விசைத்தறி போன்ற ஆலை அதிபர்கள், இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரிகள், இத்துறைகளில் பணிபுரிவோர், கமிஷன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், வேதியியல், மூலிகை சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர், அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். பணத் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான ஏஜன்சி தொழில் செய்வோர் கவனத்துடன் செயல்பட வேண்டும்! குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். அழுகுபொருள் வியாபாரிகள், மத போதகர்கள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய பேப்பர், பழைய இரும்புப் பொருட்கள், பழைய பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மிகவும் நல்ல பலன்களை அடையும் காலமாகும். பங்காளிகளுடனான கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்ற மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயம் அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் திடீர் வரவால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் வந்து சேரும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவுகளில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! பயணங்களின்போது கவனத்துடன் சென்று வருதல் சிறந்ததாகும்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் பெரியவர்களின் தலையீட்டால் கிடைக்கும். விவசாயம் செய்பவர்கள் சற்றுக் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகை கிடைப்பதில் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நகை வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணிகள் செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். நாட்பட்ட நோய்களுக்காக மருத்துவச் செலவுகளைச் செய்யும் பொருட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். கடன் கொடுத்து, நீண்ட காலமாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்தவர்கள், ஒப்பனைக் கூடம் நடத்துபவர்கள், தின்பண்ட வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்! அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பாராமல், சம்பந்தம் இல்லாத நபர்களால் சிற்சில அநுகூலங்களை அடைவீர்கள். வெகு நாட்களாகக் காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். கண் காது ஆகியவற்றில் கவனம் தேவை! மகான்களின் தரிசனங்களால் நிம்மதி ஏற்படும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பி செலுத்த இயலாமல் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதைத் தவிருங்கள்! பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வாருங்கள்! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பெண்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவதால், வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை-தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். எடுத்த காரியங்களைத் துணிவுடன், சற்று முயற்சி செய்து முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குடும்பத்தில், திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல் பாதிப்புக்களால் மன உளைச்சலும் பொருட்செலவுகளும் உண்டாகலாம். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் உறவினர்களின் தலையீட்டால் ஓரளவு நிம்மதி அடைவீர்கள். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், போக்குவரத்து நிறுவனங்களை நடத்துபவர்கள், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள், புத்தக வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொதுப் பணிகளில் கலந்துகொண்டு நிம்மதி அடைவீர்கள். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! வங்கிகளின் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள், உறவினர்கள் போன்றோரால் தேவையில்லாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் – வாங்கலில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! நண்பர்களுடன் பணப் பிரச்சினைகள் சம்பந்தமாக மனக் கசப்புகள் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். பூ, பழம், சிற்றுண்டி வியாபாரிகள், வாசனைத் திரவ வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத் துறை சார்ந்த பணியாளர்கள், மடாதிபதிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள், தாய்-சேய் நல விடுதிப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18(25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author