சில்லுனு ஒரு அரட்டை

சங்கரம் சிவ சங்கரம்!
அனைவருக்கும் வணக்கம்!

உறவுகளுக்குள் நம்பிக்கை உண்டாக்கப் பகீரத ப்ரயத்தனம் எடுக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் களங்கமில்லாதது, அதிக எதிர்பார்ப்பு இல்லாதது நட்புதான்ங்கிறது அடியேனுடைய தாழ்மையான கருத்து (சொந்த அனுபவம்தாங்க!!). அதனால பின்னூட்ட கடிதம் எழுதிய நண்பர்களின் நட்புக்கு மரியாதையா (மரியாதை மனசுல இருந்தாபோதுங்கிற உங்க குரலுக்கு நன்றி!) பதில் ஓலையோடு அரட்டைக்கு போவோமா!

நம்ம ரிஷிகிட்ட இருந்து ஆரம்பிப்போம். ஆமா ரிஷி… ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மூலை வரைக்கும் ஓடி, அந்தப் பக்கம் கடலைப் பார்த்துட்டு நீச்சல் தெரியாததால் வெறும் புகைப்படத்தோடு திரும்பிட்டேன். நீச்சல் மட்டும் தெரிஞ்சிருந்தா அப்படியே நியூஸிலாந்துக்கும் போயி அந்தப் பக்க கரையையும் படம் புடிச்சிட்டு வந்திருப்பேன்!!! போனா போவுது.. இன்னும் பல கைவசம் இருக்குது, ரிஷி. (மெதுவா ரிலீஸ் பண்ணுவோம்!!)

Cola 

படம்: நமது கோலா நண்பர் (ஓய்வெடுத்திட்டு இருக்கிறார்!)

அப்புறமா, இங்க இந்தியர்கள் மேல சில இடங்கள்ள நடக்கிற தாக்குதல் பற்றி கேட்டீங்கல்ல?! பரவலா பல காரணங்கள் சொல்றாங்க, ரிஷி. இதில் நம் மக்களின் சில அறியாமை தவறுகளும் இருக்கு, அதைப் பத்தி விவரங்களை தெரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். பொதுவா, நாம அவங்களோட வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறதா ஒரு தவறான எண்ணம். தம் திறமைகள் மீதான மதிப்பீடு குறைவாகி, எதிர்காலத்தைப் பத்தின பயம் இருக்கற மனிதர்கள் மட்டுமே இந்த மாதிரி வேலையைச் செய்யுறாங்க. நம்ம நாட்டுலயும் மாநிலங்களுக்குள்ள இதுதானே நடக்குது.. இல்லையா? இந்த பாதுகாப்பின்மை பற்றி நிலா இன்னும் அருமையா சொல்லி இருக்காங்க, படிச்சுப் பாருங்க:

https://www.nilacharal.com/ocms/log/06290915.asp

திரு. சுப்பிரமணியன் அவர்களே, இஞ்சினியரிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புக்கு 60 விழுக்காடு உதவாதுன்னு சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க! அடுத்தது, நம்ம நீதிபதி மாலீக். கூட்டத்தில முன்னாடி, பின்னாடி நின்னு கோவிந்தா (சத்தம்) போட்டதாலதானே இன்னைக்கு உங்ககிட்ட பேசற பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு! வாங்க, அதுக்காக நாம நம்ம நிலா குடும்பத்துக்கு ஒரு சலாம் போடுவோம். (வாய்ப்பு கிடைக்கிறது ஏதோ குதிரை கொம்புன்னு சொல்லுவாங்களே!!)

அப்புறம்… .வந்துட்டேன் ராஜி, முதல்ல உங்க வரவேற்புக்கு நன்றி! நான் வீட்ல கடைசின்னு கண்டுபுடிச்சதால, உங்ககிட்ட நான் பண்ணின இன்னொரு கலாட்டாவ சொல்லுறேன். நம்ம ஊரில பொதுவா பையன்னா தம்பி, பொண்ணுன்னா பாப்பா அப்படினு வீட்ல கூப்பிடுவாங்கல்லியா?…. அண்ணன் ஒரு இஞ்ச் நம்மோடு உயரத்தில் குறைவாக இருந்ததை கூடுதல் வசதியா எடுத்திட்டு, நானும் அண்ணனை தம்பி….தம்பின்னு…கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அண்ணனோட நண்பர்கள் எல்லாம் கேலி பண்ணுறாங்கன்னு சொல்லி, அண்ணன்னுதான் கூப்பிடணும்னு ஒரு சட்டம் போட்டாங்க வீட்ல. நானும் அசராம இவன் என்னை விட ஒரு இஞ்ச் உயரமா வளர்ந்துட்டான்ன்னா அண்ணன்னு கூப்பிடறேன்னு சொன்னத அண்ணனும் சீரியஸா எடுத்துக்கிட்டு, ஏதேதோ பயிற்சி செஞ்சி என்னை விட கொஞ்சம் வளர்ந்துட்டான். அப்புறமாவது அண்ணண்னு கூப்பிட்டேனானுதானே கேட்கிறீங்க. நீ வாழ்க்கையில் உயர காரணமான என்னை நீதான் அக்கான்னு கூப்பிடணும்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேங்க…எப்படி?!!!!

வானம்பாடி, நீங்க சொல்லுறது ஒரு வகையில் உண்மைங்க…. நண்பர்கள் பக்கத்தில் இல்லாதபோது, நாம பார்த்த, கேட்ட அல்லது அனுபவித்ததை பார்த்தவுடன் உளறி கொட்டுறது சகஜம்தானுங்க… சில விஷயங்களை அதோட மணம் மாறாமல் கொடுக்கணும்ங்கிற ஆ.கோ (ஆர்வக் கோளாறு) காரணமாதான் அந்த வெப்சைட் இடைச்செருகல்கள்…தப்பா எடுத்துக்காதீங்க!

பதில் ஓலையோடு அரட்டை முடிஞ்சி போயிடும் போல இருக்குதோ, இல்லீங்க! இன்னும் தொடருதுங்க!!! அப்படியே ஃபாலோ பண்ணுங்க!!! (ம்ம்….சமத்து!)

சமீபத்தில் ‘ஜோதா அக்பர்’ படம் பார்த்தேங்க. பார்த்திட்டு நண்பர்கள்கிட்ட கேட்டேன், இந்த படத்தில் வட நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் அன்றைய சமூகத்தின் கலாச்சாரம், பழக்க வழக்கத்தை பற்றி சொல்றாங்க, நம்ம தமிழ் நாட்டின் மன்னர்கள் காலம் எப்படி இருந்திருக்கும்னு. ராஜ ராஜ சோழன் படம் பார்க்க சொல்லுவாங்களோன்னு நினைக்கிறதுக்கு முன்னாடி, ‘பொன்னியின் செல்வன்’ படின்னு சொன்னாங்க. அஞ்சு பாகத்தையும் முழுசா படிச்சா (சத்தியமா ஆள் வைக்காம நானே படிச்சேங்க!) ஓரளவுக்கு என் மூளைக்கு பழந்தமிழ் நாட்டோட கலாசாரம் தெரிஞ்சது. மீதிக்கு ‘சிவகாமியின் சபதம்’ படின்னுட்டாங்க. கதையை ஒரே வரியில நம்ம அமர்நாத் இங்க சொன்னதால

https://www.nilacharal.com/ocms/log/06150914.asp

கதை தெரிஞ்சு படிச்சா சுவாரஸ்யம் இருக்காதுன்னு தற்போதைக்கு ஒரு சாக்கு சொல்லிக்கிறேன். உண்மையிலேயே நம்ம காலசாரம், பண்பாடு பத்தி தெரிஞ்சுக்கிறது ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்குது.

நம்ம சித்ரா மாதிரி நல்ல மனசுக்காரங்க யாராவது இலக்கிய, இலக்கண நூல்களையும் மொழி பெயர்த்துக் கொடுத்தா, படிச்சுட்டு நீங்க உங்க வாழ்நாள்ல இன்னும் நான்கு நாள் அதிகமா, சந்தோசமா இந்த உலகத்தில வாழ கடவுள் நண்பர்கிட்ட விண்ணப்பிச்சு வேண்டிக்குவேன்.

சித்ராவோட அருமையான சங்கம் காண்போம் படிக்க, இங்க வாங்க:

https://www.nilacharal.com/ocms/log/03300914.asp

அடுத்து ‘சுவாதேஷ்’ படம் பார்த்தேங்க. அதுல ஹீரோ ஒரு கிராமத்துக்கு மின்சார வசதி செய்து தருவாரு. இதுல என்ன இருக்குன்னு சொல்லுறேன் இருங்க… காலக்கட்டாயத்தில் இன்னைக்கு நாம பல பேர் சொந்த ஊர விட்டுட்டு, நாடோடியா "யாதும் ஊரே, யாவரும் கேளீர்"ன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு உலக முழுவதும் பரவி வாழ்ந்தாலும், நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம் பெரும்பாலானவங்ககிட்ட இருக்குது. அந்த நாடு அப்படி இருக்கு, இப்படி இருக்குன்னு ஆதங்கிக்காம, பத்து விரல்களையும் அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் நோக்கி காண்பிக்காம, ஏன் நாம நம்ம சொந்த கிராமத்திற்கு விடுமுறைக்குச் செல்லும் போது, அங்கு மக்களுக்கு அடிப்படை வசதி பூர்த்தியாக நம்மாலான உதவி செய்யக் கூடாது??? பண உதவிதான் செய்யணும்னு அவசியமில்லைங்க. நமக்கு தெரிஞ்ச நல்லவற்றை அவங்ககூட பகிர்ந்துக்கலாமே!

கணிதமேதையான வெளிநாடுவாழ் நண்பர் ஒருவர் ஒவ்வொரு வருட விடுமுறைக்கு இந்தியா வரும்போது பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு நகர மற்றும் கிராம மாணவர்களுக்கு கணித பாடம் தொடர்பான ஆலோசனை வழங்கி உதவி வருகிறார். (காசு எதுவும் வாங்காமத்தாங்க!!) நீங்களும் உங்களாலான உதவியை செஞ்சு பாருங்க. உங்க ஆத்ம திருப்திக்கு… நான் கியாரண்டி! கிராமங்களை தத்து எடுத்து உதவுற அமைப்புகள் பல இருக்கு. அவங்ககிட்ட கூட ஆலோசனை பெற்றுச் செய்யலாம். இதோ சிலர்:

https://www.nilacharal.com/info/nilananbhan/index.html

சரிங்க, விடை பெற நேரம் வந்துடுச்சி. நான் போய் கவிதாகிட்ட கணினி மொழியில கடுதாசி எழுதப் பழகப் போறேங்க. திரும்ப வர்றவரைக்கும் உங்ககிட்ட எந்தக் கேள்வி இருந்தாலும் தயங்காம… (எங்கிட்ட கேட்காதீங்க…) நண்பர் ஜோகிட்ட கேளுங்க…. (எங்கயாவது சுட்டாவது கொண்டு வருவாரு!!!!)

இன்பத்தில் மகிழ்ந்திட ,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு..

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…

(மேல உள்ளது எங்கேயோ படிச்சதுதாங்க!!!!)

வரட்டா!!!!!!!!

About The Author

12 Comments

  1. Jo

    அடுத்த ஞாயிறு நண்பர்கள் தினம்ங்கறதை உங்க அரட்டை நினைவுபடுத்திடுச்சு… அரட்டை நண்பர்கள் எல்லோருக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.

  2. Rishi

    நிலாச்சாரல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபிரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்.
    இந்த நாளை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? பின்னணி கதை நிச்சயம் பாலு சாருக்கு தெரிந்திருக்கக் கூடும்!

  3. R.V.Raji

    வணக்கம் ஹேமா!..
    நீங்க சொன்னமாதிரியே முதல்ல நம்ம நிலா குடும்பத்துக்கு ஒரு சலாம்”!
    வறுமையில இருக்கிறவங்களுக்கு பணம் மட்டுமல்லாம கல்வியையும், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தா, அவங்க சொந்த கால்ல நிக்க பெரிய உதவியா இருக்கும். இது என்னுடைய எண்ணமும்கூட.
    கருத்துக்களும், யோசனைகளும் அருமையாயிருக்கு ஹேமா…”

  4. Hema Manoj

    நண்பர்கள் தினத்தை நினைவூட்டிய ஜோவுக்கு நன்றி. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  5. Hema Manoj

    ரிஷி ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தின கொண்டாட்டத்தை அமெரிக்கா 1935 வது வருடம் ஆரம்பிச்சதா இனையதளம் சொல்லுது.யாரவது காரணம் அறிந்து சொன்ன நல்லா இருக்கும்.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  6. Hema Manoj

    வணக்கம் ராஜி. நண்பர்கள் தின வாழ்த்துக்கள். ஆமா ராஜி நீங்க சொல்லுற மாதிரி நம்மளான உதவி கண்டிப்பா செய்வோம். நம்ம ரிஷியோட கனவு ஒன்னு இருக்கு, எல்லார்க்கும் எல்லாம் குறைவு இல்லாம அதிகமாகவும் இல்லாம கிடைக்கனுமாம்”. நிலா குடும்பத்தினர் நாம எல்லாம் சேர்ந்து இந்த கனவுக்கு உருவம் கொடுக்க அணில் வேலை ஆரம்பிப்போம்.”

  7. kavitha

    ஹேமா! கலக்கீட்டிங்க! உங்களுக்குள்ளே தூங்கிட்டு இருந்த எழுத்தாளரை தட்டி எழுப்பிய எடிட்டரம்மாவுக்கு ஒரு சலாம்.
    அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  8. Hema Manoj

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கவிதா. பாரட்டுகளுக்கு நன்றி. நிலா மற்றும் நிலாசாரல் குடும்பத்தின் மூத்த எழுத்தாளர்களின் அன்பான வழிகாட்டுதலும், ஊக்கமும் சேர்ந்ததின் உபாயம்தான் இது கவிதா.

  9. Hema Manoj

    பாராட்டுக்கு நன்றி கமலா. தங்களுக்கு எங்கள் நிலா குடும்பத்தின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Comments are closed.