ஜோதிடம் கேளுங்கள்

நான் வெளிநாடு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்போது போக முடியும்? இந்த வருடத்திற்குள் போவதற்கு வாய்ப்புகள் உண்டா? – இ.நிரோஜன், சிலோ

அன்பு நிலாச்சாரல் வாசகர் நிரோஜன் அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் மீனம் ஆகும். தங்களின் ஜாதகப்படி குரு தங்களின் லக்னமான மீனத்திற்கு 12-ம் இடமான கும்பத்திற்கு டிசம்பர் 2009 முதல் மாறுகிறார். ஆங்கிலப் புத்தாண்டு துவங்கியவுடன் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். தங்கள் எண்ணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

எனது நிலத்தை எப்போது விற்க முடியும்? நான் எதிர்பார்க்கும் விலை கிடைக்குமா? எப்போது எனக்கு சொந்த வீடு அமையும்? புதியதாக வீடு கட்ட முடியுமா? அல்லது பழைய வீட்டை விலைக்கு வாங்க முடியுமா? – ஜி.பிரபாகரன், புதுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் பிரபாகரன் அவர்களே !

54 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம் ராசி தனுசு, லக்னம் மீனம் ஆகும். லக்னத்திலிருந்து 5-ல் இருக்கும் குரு பகவான் வலுவான நிலையில் உள்ளார். தங்கள் ராசி மற்றும் லக்னாதிபதியான குரு பகவான், டிசம்பர் 2009 முதல் வளம் பல நல்கும் 11-ம் இடத்தில் அமரும் காலத்தில், தாங்கள் விரும்பிய விலைக்கு நிலத்தை விற்பதோடு, தாங்கள் 2010 இறுதிக்குள் புதிய வீடு வாங்கும் யோகம் கிட்டும். தாங்கள் விரைவில் வீடு கட்டுவதற்கு நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******

எனது கால் வலி எப்போது சரியாகும்? எனக்கு எப்போது சொந்த வீடு அமையும்? தற்போது நான் குடியிருக்கும் வீடு ராசியுள்ள வீடா? வீட்டில் ஏதேனும் தோஷம் உள்ளதா? – ஏ.உஷாராணி, கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி உஷாராணி அவர்களே!

45 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம் ராசி மகரம், லக்னம் தனுசு ஆகும். தங்களுக்கு கால் வலி 2010-ன் இறுதிக்குள் சரியாகி விடும். தங்களின் ஜாதகப்படி தாங்கள் குடியிருக்கும் வீட்டில் எந்த தோஷமும் இல்லை. இல்லத்தில் துளசிச் செடி வளர்த்து வழிபட்டு வாருங்கள். எந்த தோஷமும் அண்டாது. தங்கள் லக்னமான தனுசிலிருந்து 5-ம் இடமான மேஷத்திற்கு குரு செல்லும் காலமான மே 2010லிருந்து ஒரு வருட காலகட்டத்தில் தங்களுக்கு சொந்த வீடு அமையும். தங்களின் கால் வலி குணமாவதற்கும், சொந்த வீடு அமைவதற்கும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author