ஜோதிடம் கேளுங்கள்

எம்.இ படித்து முடித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது, எனக்கு பிடித்தமான எனது இலாக்காவிலேயே வேலை கிடைக்குமா? என் ஜாதக நிலைகள் எப்படி உள்ளது? ப்ளீஸ்…- ஜி. குருப்ரசாத், காளஹஸ்தி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் குருப்ரசாத் அவர்களே !

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம், லக்னம் கன்னி. தங்களின் ஜாதகப்படி நடக்கும், திசை மற்றும் புக்தி, வேலை வாய்ப்புக்கு சாதகமாக உள்ளது. தங்களின் ஜாதகத்தில், 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளதால், செவ்வாய்கிழமை தோறும் துர்க்கையை வழிபடவும். விரைவில் வேலை கிடைக்கும். தங்களின் ஜாதக நிலை நன்றாக உள்ளது. விரைவில் விரும்பிய வேலை கிடைக்க, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் 

*******************

எப்போது எனக்கு கல்யாணம் நடக்கும், எப்போது எனக்கு வேலை கிடைக்கும்? – பி. வேல்முருகன், அரியலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் வேல்முருகன் அவர்களே !

31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கார்த்திகை, ராசி ரிஷபம், லக்னம் மிதுனம். தங்களின் ஜாதகத்தில், மே 2012 வரை குரு பகவான் வளங்களை நல்கும் 11-ம் இடத்தில் உள்ளார். வியாழக்கிழமை தோறும், குருவை வழிபட்டுவர, முதலில் வேலை கிடைத்து, பின் திருமணமும் கைக்கூடிவிடும். வளமான வாழ்க்கை பெற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

****************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

*****************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.”

About The Author