ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வியாபாரம் செய்வதற்கு விருப்பமாக உள்ளது? என்ன மாதிரியான வியாபாரம் எனக்கு பொருத்தமானதாக இருக்கும்? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? – ர. முரளீதரன், நுவாரா எலியா.

அன்பு நிலாச்சாரல் வாசகர் முரளீதரன் அவர்களே !

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் மீனம். தங்களின் லக்னாதிபதியான குரு, தொழில் ஸ்தானமான 2-ம் இடத்தில் இருப்பதாலும், 5 கிரகங்கள் 6-ம் இடத்தில் இருப்பதாலும், தாங்கள் பொதுமக்களோடு தொடர்புடைய வேலைகளில் நன்கு பிரகாசிக்க முடியும். தங்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். வியாபாரம் செய்ய வேண்டும் என்று விரும்பும் தாங்கள் கணினி சம்பந்தமான பொருட்களை செய்யும் துறையில் ஈடுபடலாம். தங்களின் எண்ணம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***************

நான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்போது நடக்கும்? – திருவரங்கசெல்வி, திருநெல்வேலி

அன்பு நிலாச்சாரல் வாசகி திருவரங்க செல்வி அவர்களே !

20 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம், ராசி ரிஷபம், லக்னம் விருச்சிகம். தங்களின் ஜாதகத்தில் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதால், உயர்கல்வி படித்தபின் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும். தங்களின் திருமணம் 2012 மே மாதத்திற்குள் நடக்கும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***************

பதில்களை வழங்கியவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A., சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author